லண்டன்,
ஹர்மன்பிரீத் கவுர் தலைமையிலான இந்திய பெண்கள் அணி, நாட்சிவெர் தலைமையிலான இங்கி லாந்து அணியுடன் ஒரே ஒரு டெஸ்ட் போட்டியில் மோது கிறது. இந்த டெஸ்ட் போட்டி புகழ் பெற்ற லண்டன் லார்ட்ஸ் மைதானத்தில் இன்று (வெள்ளிக்கிழமை) முதல் 13-ந் தேதி வரை நடக்கிறது.
142 ஆண்டு காலமாக லார்ட்ஸ் மைதானத்தில் ஆண்கள் டெஸ்ட் போட்டி நடைபெற்று வருகிறது. கிரிக்கெட்டின் தாய கம் என்று அழைக்கப்படும் லார்ட்சில் அரங்கேறும் முதல் பெண்கள் டெஸ்ட் போட்டி இதுவாகும். இதனால் இந்த போட்டி அதிக முக்கியத்துவம் பெறுகிறது.
டாஸ் வென்ற இங்கிலாந்து அணி கேப்டன் நாட் சீவர் பிரண்ட் பவுலிங் தேர்வு செய்தார் அதன்படி, இந்திய அணி முதலில் பேட்டிங் செய்து வருகிறது. தொடக்க வீராங்கனையா ஸ்மிருதி மந்தனா களமிறங்கினார். அவர் அரைசதம் அடித்து சிறப்பாக விளையாடி வருகிறார்.
இந்நிலையில், இந்திய மகளிர் கிரிக்கெட் அணியின் தொடக்க வீராங்கனை ஸ்மிருதி மந்தனா தனது 300-வது சர்வதேச போட்டியை இன்று விளையாடி சாதனை படைத்துள்ளார். இங்கிலாந்துக்கு எதிரான வரலாற்றுச் சிறப்புமிக்க லார்ட்ஸ் டெஸ்ட் போட்டியின் மூலம் இந்த மைல்கல்லை எட்டினார்.
சர்வதேச அளவில் 300 போட்டிகளில் விளையாடிய 12-வது வீராங்கனை மற்றும் இளம் வயதிலேயே இந்த சாதனையை எட்டிய முதல் வீராங்கனை என்ற பெருமையைப் பெற்றுள்ளார்.