வாஷிங்டன்,
4வது மேஜர் லீக் டி20 கிரிக்கெட் தொடர் அமெரிக்காவில் நடந்து வருகிறது. இத்தொடரில் இன்று நடைபெற்று வரும் 18வது லீக் ஆட்டத்தில் டெக்சாஸ் சூப்பர் கிங்ஸ், லாஸ் ஏஞ்சல்ஸ் நைட் ரைடர்ஸ் அணிகள் மோதின.
கலிபோர்னியாவில் நடந்த இந்த ஆட்டத்தில் டாஸ் வென்ற லாஸ் ஏஞ்சல்ஸ் நைட் ரைடர்ஸ் முதலில் பந்து வீச்சு தேர்வு செய்தது. இதையடுத்து, களமிறங்கிய டெக்சாஸ் சூப்பர் கிங்ஸ் 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட்டுகள் இழப்பிற்கு 173 ரன்கள் எடுத்தது. சிறப்பாக ஆடிய அந்த அணியின் தொடக்க வீரர் சாய்தேஜா 55 பந்துகளில் 80 ரன்கள் குவித்தார்.
நைட் ரைடர்ஸ் தரப்பில் அந்த அணியின் சுனில் நரைன், ஜேசன் ஹோல்டர் தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.
இதையடுத்து, 174 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற சவாலான இலக்குடன் நைட் ரைடர்ஸ் 18.4 ஓவரில் 4 விக்கெட்டுகளை இழந்து 175 ரன்கள் எடுத்தது. இதன் மூலம் டெக்சாஸ் சூப்பர் கிங்சை 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தி லாஸ் ஏஞ்சல்ஸ் நைட் ரைடர்ஸ் அபார வெற்றிபெற்றது. சிறப்பாக ஆடிய நைட் ரைடர்ஸ் அணியின் ரவுமன் பவுல் 27 பந்துகளில் 73 ரன்கள் குவித்து அணியின் வெற்றிக்கு வழிவகுத்தார்.