கிரிக்கெட்

’கடவுள் எனக்கு நல்ல துணையைக் கொடுத்துள்ளார்’... வருங்கால மனைவி குறித்து அர்ஷ்தீப் நெகிழ்ச்சி

நியூசிலாந்தில் உள்ள மவுண்ட் மாங்கனுய் கடற்கரையில் சம்ரீனிடம் அர்ஷ்தீப் காதலை தெரிவித்தார்.

மவுண்ட் மாங்கனுய்,

11-வது வீரராக களமிறங்கி பேட்டிங் செய்வதை விரும்புவதாக இந்திய கிரிக்கெட் அணியின் வேகப்பந்து வீச்சாளர் அர்ஷ்தீப் சிங் கூறினார்.

200 ரன்களைக் கடக்க திட்டம்

இந்தியா – நியூசிலாந்து அணிகள் மோதிய 5-வது ஒருநாள் போட்டியில் அர்ஷ்தீப் சிங் பேட்டிங்கில் 4 பந்துகளில் 14 ரன்கள் எடுத்தார். இதில் 2 சிக்சர்கள் அடங்கும். முகமது சிராஜுடன் இணைந்து கடைசி விக்கெட்டுக்கு 26 ரன்கள் சேர்த்தார். பின்னர் பந்துவீச்சில் 3 விக்கெட்டுகளையும் வீழ்த்தி ஆட்டநாயகன் விருதைப் பெற்றார்.

போட்டி முடிந்த பிறகு பேசிய அர்ஷ்தீப், “11-வது வீரராக பேட்டிங் செய்வதையும் நான் விரும்புகிறேன். சில சக வீரர்கள் நான் பந்தைப் பார்த்து பயப்படுவதாக கூறுவார்கள். ஆனால், நான் பந்தை எதிர்கொண்டு அடிக்க முயற்சி செய்வேன்.

சிராஜும் நானும் கடைசி நேரத்தில் வேகமாக ரன்கள் எடுத்து, அணியின் ஸ்கோரை 200 ரன்களைக் கடக்கச் செய்ய வேண்டும் என்று நினைத்தோம். நாங்கள் ஆட்டமிழந்து வெளியே வந்தபோதுதான் அந்த ரன்களின் முக்கியத்துவம் புரிந்தது. சிராஜும் இந்த ரன்கள் மிகவும் முக்கியமானவை என்று கூறினார்” என்றார்.

நிச்சயதார்த்தம் குறித்து சுவாரசியம்

இதற்கிடையே, நடிகையும் மாடலுமான சம்ரீன் கவுருடன் அர்ஷ்தீப் சிங்கிற்கு நவம்பர் 11-ம் தேதி நிச்சயதார்த்தம் நடைபெற்றது. நியூசிலாந்தில் உள்ள மவுண்ட் மாங்கனுய் கடற்கரையில் சம்ரீனிடம் அவர் காதலைத் தெரிவித்தார்.

இந்த மகிழ்ச்சியான தருணம் குறித்துப் பேசிய அர்ஷ்தீப், தனது துணை எப்போதும் தனக்கு ஆதரவாக இருப்பதாகக் கூறினார்.

இதுகுறித்து அவர் பேசுகையில், “கடவுள் எனக்கு ஒரு நல்ல துணையைக் கொடுத்துள்ளார். அவர் எப்போதும் எனக்கு ஆதரவாக இருந்து, சரியான மனநிலையில் இருக்க உதவுகிறார். மைதானத்தில் நான் எப்படி செயல்படுகிறேன் என்பதிலும், மைதானத்துக்கு வெளியே நான் இருக்கும் விதம் முக்கியப் பங்கு வகிக்கிறது.

நிச்சயதார்த்தத்தின்போது நான் மிகவும் பதற்றமாக இருந்தேன். ஆனால், அங்கிருந்த அழகான இயற்கைக் காட்சி அந்தப் பதற்றத்தைக் குறைக்க உதவியது. இது மிகவும் மகிழ்ச்சியான தருணம்” என்றார்.

கிரிக்கெட் களத்தில் பேட்டிங், பந்துவீச்சு என இரண்டிலும் கவனம் ஈர்த்துள்ள அர்ஷ்தீப், தற்போது தனது தனிப்பட்ட வாழ்க்கையிலும் மகிழ்ச்சியான புதிய அத்தியாயத்தைத் தொடங்கியுள்ளார்.

SCROLL FOR NEXT