லக்னோ,
10 அணிகள் பங்கேற்றுள்ள 19-வது ஐ.பி.எல். கிரிக்கெட் தொடர் இந்தியா வின் பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது. இதில் லக்னோவில் இன்று (வியாழக்கிழமை) நடைபெறும் 50-வது லீக் ஆட்டத்தில் லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணி, நடப்பு சாம்பியன் பெங்களூரு ராயல் சேலஞ்சர்சை எதிர்கொள்கிறது.
இந்த போட்டிக்கான டாஸ் போடப்பட்டது. அதில் டாஸ் வென்ற பெங்களுரு அணியின் கேப்டன் ரஜத் படிதார் பந்துவீச்சை தேர்வு செய்தார். அதன்படி லக்னோ அணி முதலில் பேட்டிங் செய்தது.
தொடக்கம் முதல் லக்னோ அதிரடியாக விளையாடியது. லக்னோ அணி 9 ஓவர்கள் முடிவில் விக்கெட் இழப்பின்றி 95 ரன்கள் எடுத்திருந்த போது மழை குறுக்கிட்டது. இதனால் ஆட்டம் தற்போது நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.
மிட்சேல் மார்ஷ் 76 ரன்களும் , அர்ஷின் குல்கர்னி 17 ரன்களும் எடுத்தனர்.