கிரிக்கெட்

லக்னோ கேப்டன் ரிஷப் பண்ட்-க்கு அபராதம்: காரணம் என்ன ?

7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் லக்னோ அணி வெற்றி பெற்றது.

லக்னோ,

லக்னோவில் நேற்று நடைபெற்ற 59-வது லீக் ஆட்டத்தில், லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணியிடம் சென்னை சூப்பர் கிங்ஸ் தோல்வியைத் தழுவியது. முதலில் பேட்டிங் செய்த சென்னை அணி 187 ரன்கள் எடுத்தது.

பின்னர் 188 ரன்கள் என்ற இலக்கை நோக்கி ஆடிய லக்னோ அணி 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

இந்த நிலையில், இந்த போட்டியில் லக்னோ அணி பந்துவீச அதிக நேரம் எடுத்துக்கொண்டதாக அந்த அணியின் கேப்டன் ரிஷப் பண்ட்-க்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. போட்டி கட்டணத்தில் ரூ.12 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.