கிரிக்கெட்

லக்னோ வீரர் ஷமி புதிய சாதனை

பஞ்சாப் அணி 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

19-வது ஐ.பி.எல். கிரிக்கெட் திருவிழா இறுதி கட்டத்தை எட்டி விட்டது. இந்த நிலையில் லக்னோவில் நேற்று நடைபெற்ற 68-வது லீக் ஆட்டத்தில் லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ்- பஞ்சாப் கிங்ஸ் அணிகள் மோதின. இந்த போட்டியில் பஞ்சாப் அணி 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

இருப்பினும் லக்னோ அணி வீரர் ஷமி சிறப்பாக பந்துவீசி 2 விக்கெட்டுகள் வீழ்த்தினார். இதில் முதல் ஓவரில் முதல் பந்தில் ஒரு விக்கெட் வீழ்த்தினார்.

இந்த நிலையில், ஐபிஎல் வரலாற்றில் ஒரு இன்னிங்ஸின் முதல் பந்திலேயே அதிக விக்கெட்டுகளை (6 விக்கெட் ) வீழ்த்தியவர் என்ற பெருமையை ஷமி பெற்றுள்ளார்.