கிரிக்கெட்

ஐபிஎல்: லக்னோ - பஞ்சாப் இன்று மோதல்

ஐபிஎல் கிரிக்கெட் தொடர் பரபரப்பான கட்டத்தை எட்டியுள்ளது.

லக்னோ,

ஐபிஎல் கிரிக்கெட் தொடர் பரபரப்பான கட்டத்தை எட்டியுள்ளது. அதன்படி பிளே ஆப் சுற்றுக்குள் பெங்களூரு, குஜராத், ஐதராபாத் ஆகிய 3 அணிகள் நுழைந்துள்ளன. எஞ்சிய ஒரு இடத்திற்கு 4 அணிகள் போட்டியிடுகின்றன.

இந்நிலையில், ஐபிஎல் தொடரில் இன்று நடைபெறும் 68வது லீக் ஆட்டத்தில் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் , பஞ்சாப் கிங்ஸ் அணிகள் மோத உள்ளன. லக்னோவில் இன்று இரவு 7.30 மணிக்கு ஆட்டம் தொடங்குகிறது.

புள்ளிப்பட்டியலில் கடைசி இடத்தில் உள்ள லக்னோ ஏற்கனவே பிளே ஆப் சுற்றை இழந்துவிட்டது. அதேவேளை, புள்ளிப்பட்டியலில் 5வது இடத்தில் உள்ள பஞ்சாப் பிளே ஆப் சுற்றுக்குள் நுழைவதற்கான வாய்ப்பை நீட்டிக்க இன்றைய போட்டியில் கட்டாயம் வெற்றிபெற்றே ஆக வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.