கிரிக்கெட்

மேஜர் லீக் கிரிக்கெட்: வாஷிங்டனை வீழ்த்தி லாஸ் ஏஞ்சல்ஸ் சாம்பியன்

லாஸ் ஏஞ்சல்ஸ் 19.4 ஓவரில் 164 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது

வாஷிங்டன்,

6 அணிகள் பங்கேற்ற மேஜர் லீக் டி20 கிரிக்கெட் தொடரில் இன்று நடைபெற்ற இறுதிப்போட்டியில் ஜேசன் ஹோல்டர் தலைமையிலான லாஸ் ஏஞ்சல்ஸ் நைட் ரைடர்ஸ், ஸ்டீவ் ஸ்மித் தலைமையிலான வாஷிங்டன் பிரிடம் அணிகள் மோதின.

லாஸ் ஏஞ்சல்ஸ் சாம்பியன்

இப்போட்டிக்கான டாஸ் சுண்டப்பட்டது. இதில் டாஸ் வென்ற வாஷிங்டன் முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தது. இதையடுத்து முதலில் பேட்டிங் செய்த லாஸ் ஏஞ்சல்ஸ் 19.4 ஓவரில் 164 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. அந்த அணியின் பிளட்சர் அதிகபட்சமாக 47 ரன்கள் சேர்த்தார். சிறப்பாக பந்து வீசிய வாஷிங்டன் வீரர் பென் வார்ஷஸ் அதிகபட்சமாக 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

இதையடுத்து 165 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற சவாலான இலக்குடன் களமிறங்கிய வாஷிங்டன் பிரிடம் 20 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட்டுகள் இழப்பிற்கு 163 ரன்கள் எடுத்தது. இதன் மூலம் வாஷிங்டன் பிரிடமை 1 ரன் வித்தியாசத்தில் வீழ்த்திய லாஸ் ஏஞ்சல்ஸ் நைட் ரைடர்ஸ் சாம்பியன் பட்டம் வென்றது.