வாஷிங்டன்,
4வது மேஜர் லீக் டி20 கிரிக்கெட் தொடர் அமெரிக்காவில் கடந்த மாதம் 18 தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. இத்தொடரில் 6 அணிகள் பங்கேற்றுள்ளன.
இதில் புள்ளிப்பட்டியலில் முதல் 4 இடங்களை பிடித்துள்ள சான் பிரான்சிஸ்கோ, லாஸ் ஏஞ்சல்ஸ், நியூயார்க், வாஷிங்டன் அணிகள் பிளே ஆப் சுற்றுக்கு முன்னேறியுள்ளன.
இந்நிலையில், மேஜர் லீக் கிரிக்கெட் தொடரில் நாளை நடைபெறும் 29வது லீக் ஆட்டத்தில் எம்.ஐ. நியூயார்க் - வாஷிங்டன் பிரிடம் அணிகள் மோத உள்ளன. இந்திய நேரப்படி நள்ளிரவு 2 மணிக்கு ஆட்டம் தொடங்குகிறது. இரு அணிகளும் ஏற்கனவே பிளே ஆப் சுற்றுக்கு முன்னேறிவிட்டன என்பது குறிப்பிடத்தக்கது.