Image Courtesy:@MLCricket  
கிரிக்கெட்

மேஜர் லீக் கிரிக்கெட்; சூப்பர் கிங்ஸை வீழ்த்தி திரில் வெற்றி பெற்ற சான் பிரான்சிஸ்கோ

சான் பிரான்சிஸ்கோ தரப்பில் அதிகபட்சமாக மேத்யூ ஷார்ட் 80 ரன்கள் எடுத்தார்.

புளோரிடா,

அமெரிக்காவில் நடைபெற்று வரும் மேஜர் லீக் கிரிக்கெட் தொடரில் நேற்று நடைபெற்ற ஒரு லீக் ஆட்டத்தில் டெக்சாஸ் சூப்பர் கிங்ஸ் - சான் பிரான்சிஸ்கோ யுனிகார்ன்ஸ் அணிகள் மோதின. இந்த ஆட்டத்தில் முதலில் பேட்டிங் செய்த சான் பிரான்சிஸ்கோ அணி 20 ஓவரில் 6 விக்கெட்டை இழந்து 148 ரன்கள் எடுத்தது.

சான் பிரான்சிஸ்கோ தரப்பில் அதிகபட்சமாக மேத்யூ ஷார்ட் 80 ரன்கள் எடுத்தார். சூப்பர் கிங்ஸ் தரப்பில் ஸ்டாய்னிஸ் 3 விக்கெட் வீழ்த்தினார். தொடர்ந்து 149 ரன் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களம் புகுந்த சூப்பர் கிங்ஸ் அணி 20 ஓவரில் 7 விக்கெட்டை இழந்து 147 ரன்கள் மட்டுமே எடுத்தது.

இதன் மூலம் 1 ரன் வித்தியாசத்தில் சூப்பர் கிங்ஸை வீழ்த்தி சான் பிரான்சிஸ்கோ அணி திரில் வெற்றி பெற்றது. சூப்பர் கிங்ஸ் தரப்பில் அதிகபட்சமாக சைதேஜா முக்கமல்லா 34 ரன் எடுத்தார்.