கிரிக்கெட்

மேஜர் லீக் கிரிக்கெட்: சியாட்டிலை வீழ்த்திய சான் பிரான்சிஸ்கோ

டாஸ் வென்ற சான் பிரான்சிஸ்கோ முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தது.

வாஷிங்டன்,

4வது மேஜர் லீக் டி20 கிரிக்கெட் தொடர் அமெரிக்காவில் கடந்த மாதம் 18 தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. இத்தொடரில் 6 அணிகள் பங்கேற்றுள்ளன. இதில் புள்ளிப்பட்டியலில் முதல் 4 இடங்களை பிடிக்கும் அணிகள் அடுத்த சுற்றுக்கு முன்னேறும்.

சான் பிரான்சிஸ்கோ - சியாட்டில்

இந்நிலையில், மேஜர் லீக் கிரிக்கெட் தொடரில் இன்று நடைபெற்ற 28வது லீக் ஆட்டத்தில் சான் பிரான்சிஸ்கோ யூனிகான்ஸ் - சியாட்டில் ஓர்காஸ் அணிகள் மோதின. டெல்லஸ் மைதானத்தில் நடைபெற்ற இந்த ஆட்டத்தில் டாஸ் வென்ற சான் பிரான்சிஸ்கோ முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தது.

சான் பிரான்சிஸ்கோ வெற்றி

இதையடுத்து களமிறங்கிய சியாட்டில் 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட்டுகள் இழப்பிற்கு 190 ரன்கள் குவித்தது. அந்த அணியின் மேத்திவ் பிரிட்ஸ்கெ அதிகபட்சமாக 29 பந்துகளில் 55 ரன்கள் குவித்தார்.

இதையடுத்து 191 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற சவாலான இலக்குடன் களமிறங்கிய சான் பிரான்சிஸ்கோ 19 ஓவரில் 4 விக்கெட்டுகள் இழப்பிற்கு 194 ரன்கள் சேர்த்தது. இதன் மூலம் சியாட்டில் ஓர்காசை 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தி சான் பிரான்சிஸ்கோ யூனிகான்ஸ் அபார வெற்றிபெற்றது. சிறப்பாக ஆடிய சான் பிரான்சிஸ்கோ அணியின் தொடக்க வீரர் பின் ஆலன் 31 பந்துகளில் 65 ரன்கள் குவித்து அணியின் வெற்றிக்கு வழிவகுத்தார்.