வாஷிங்டன்,
4வது மேஜர் லீக் டி20 கிரிக்கெட் தொடர் அமெரிக்காவில் கடந்த மாதம் 18ம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. 6 அணிகள் பங்கேற்ற இத்தொடர் தற்போது இறுதி கட்டத்தை எட்டியுள்ளது.
அதன்படி, பிளே ஆப் சுற்றில் வெற்றிபெற்ற லாஸ் ஏஞ்சல்ஸ் நைட் ரைடர்ஸ் - வாஷிங்டன் பிரிடம் அணிகள் இறுதிப்போட்டிக்குள் நுழைந்துள்ளன.
இரு அணிகளுக்கும் இடையேயான இறுதிப்போட்டி நாளை இந்திய நேரப்படி 5 மணிக்கு கலிபோர்னியாவில் உள்ள மைதானத்தில் தொடங்குகிறது.
ஜேசன் ஹோல்டர் தலைமையிலான லாஸ் ஏஞ்சல்ஸ், ஸ்டீவ் ஸ்மித் தலைமையிலான வாஷிங்டன் அணி மோதும் இப்போட்டியில் வென்று மேஜர் லீக் கோப்பையை வென்று சாம்பியன் பட்டத்தை கைப்பற்றப்போவது யார்? என்பதில் ரசிகர்கள் பெரும் ஆவல் ஏற்பட்டுள்ளது.