டெல்லி,
ஆஸ்திரேலிய அணியில் காயத்தால் கம்மின்ஸ், ஹேசில்வுட் ஆகியோர் ஏற்கனவே விலகிவிட்டனர். தொடை இடுக்கு பகுதியில் காயமடைந்த கேப்டன் மிட்செல் மார்ஷ் முதல் 2 ஆட்டங்களிலும் ஆடவில்லை. அவர் இந்த உலகக் கோப்பையில் எஞ்சிய ஆட்டங்களில் ஆடுவது சந்தேகம் தான். தற்போது ஆல்-ரவுண்டர் மார்கஸ் ஸ்டோனிசும் காயத்தில் சிக்கியுள்ளார்.
நேற்றைய ஆட்டத்தில் தனது பந்து வீச்சில் ஜிம்பாப்வே வீரர் ரையான் பர்ல் ஓங்கி அடித்த பந்தை பிடிக்க முயன்ற போது மணிக்கட்டில் பலமாக தாக்கியது. இதனால் அந்த ஓவரை முழுமையாக வீசாமல் வெளியேறிய அவர் வலியை பொறுத்துக் கொண்டு பேட்டிங் செய்தார். எஞ்சிய போட்டிகளில் அவர் விளையாடுவாரா என்பது கேள்விக்குறியே.