கிரிக்கெட்

மும்பை அணிக்கு எதிரான போட்டி: அர்ஷ்தீப் சிங் புதிய மைல்கல்

பஞ்சாப் வீரர் அர்ஷ்தீப் சிங் 3 விக்கெட்டுகள் வீழ்த்தினார்.

மும்பை,

மும்பை வான்கடே மைதானத்தில் நேற்று நடைபெற்ற மும்பை அணிக்கு எதிரான 24-வது லீக் ஆட்டத்தில், பஞ்சாப் அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்த போட்டியில் பஞ்சாப் வீரர் அர்ஷ்தீப் சிங் 3 விக்கெட்டுகள் வீழ்த்தினார்.

அர்ஷ்தீப்சிங், ரிக்கெல்டனின் விக்கெட்டை வீழ்த்திய போது அது அவரது 100-வது விக்கெட்டாக (87 ஆட்டம்) அமைந் தது. ஐ.பி.எல்.-ல் இந்த மைல்கல்லை எட்டிய 31-வது பவுலர் ஆவார்.