சென்னை,
டி20 உலகக்கோப்பை தொடரில் தற்போது சூப்பர் 8 சுற்று போட்டிகள் நடைபெற்று வருகிறன. சூப்பர் 8 சுற்றில் முதல் ஆட்டத்தில் தோல்வியடைந்த இந்திய அணி நாளை ஜிம்பாப்வே அணியுடன் மோதுகிறது.
இந்திய அணியில் இடம் பெற்றுள்ள அதிரடி பேட்ஸ்மேன் ரிங்கு சிங் குடும்ப அவசரநிலை காரணமாக சொந்த ஊருக்கு திரும்பினார். அவ ரது தந்தை கான்சந்த் சிங் உடல்நலக்குறைவால் உத்தரபிரதேச மாநிலம் நொய்டாவில் உள்ள ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு இருப்பதாக வும், அவரை பார்க்க சென்றிருப்பதாகவும் கிரிக் கெட் வாரிய வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. இதனால் சென்னையில் நாளை நடக்கும் ஜிம்பாப்வேக்கு எதிரான ஆட்டத்தில் அவர் விளையாடுவது சந்தேகம் என தகவல் வெளியாகியுள்ளது.