கிரிக்கெட்

2வது ஒருநாள் போட்டியில் களமிறங்கத் தயாரான மேட் ஹென்றி

மேட் ஹென்றி 2வது ஒருநாள் போட்டியில் விளையாடத் தகுதி பெற்றுள்ளார்.

இந்தியா – நியூசிலாந்து அணிகள் இடையிலான 5 போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடரின் 2வது போட்டி நாளை (நவம்பர் 7) வெலிங்டனில் நடைபெறவுள்ளது. இந்தப் போட்டிக்கு முன்னதாக நியூசிலாந்து அணிக்கு முக்கியமான செய்தி வெளியாகியுள்ளது. அந்த அணியின் நட்சத்திர வேகப்பந்து வீச்சாளர் மேட் ஹென்றி 2வது ஒருநாள் போட்டியில் விளையாடத் தகுதி பெற்றுள்ளார்.

நியூசிலாந்து

முதல் ஒருநாள் போட்டிக்கு முன்பாக ஆக்லாந்தில் நடைபெற்ற பயிற்சியின்போது கேட்ச் பிடிக்க முயன்ற மேட் ஹென்றி மற்றும் தொடக்க வீரர் டெவான் கான்வே ஆகியோர் எதிர்பாராதவிதமாக மோதிக்கொண்டனர். இந்தச் சம்பவத்தில் இருவருக்கும் தலையில் காயம் ஏற்பட்டது. இதையடுத்து இருவருக்கும் உடனடியாக மருத்துவப் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.இதில் டெவான் கான்வே இந்தியாவுக்கு எதிரான எஞ்சிய ஒருநாள் போட்டிகளில் இருந்து விலகியுள்ளார். அவருக்குப் பதிலாக நிக் கெல்லி நியூசிலாந்து அணிக்கு அழைக்கப்பட்டுள்ளார்.

இந்திய அணி

மறுபுறம், மேட் ஹென்றி 2வது ஒருநாள் போட்டியில் விளையாடுவதற்குத் தகுதி பெற்றுள்ளதாக நியூசிலாந்து கிரிக்கெட் வாரியம் அறிவித்துள்ளது.

ஏற்கெனவே இந்தியாவுக்கு எதிரான டி20 தொடரின் கடைசி மூன்று போட்டிகளில் காயம் காரணமாக மேட் ஹென்றி விளையாடவில்லை. தற்போது அவர் மீண்டும் அணிக்குத் திரும்பத் தயாராக இருப்பது நியூசிலாந்து அணியின் பந்துவீச்சைப் பலப்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மேட் ஹென்றி அணியில் இடம்பெறுவது இந்திய அணியின் பேட்ஸ்மேன்களுக்கு சவாலாக இருக்கும். குறிப்பாக புதிய பந்தில் ஸ்விங் மற்றும் துல்லியமான வேகப்பந்து வீச்சு மூலம் விக்கெட்டுகளை வீழ்த்தும் திறன் கொண்டவர்.

SCROLL FOR NEXT