கிரிக்கெட்

இந்திய முன்னாள் கேப்டன் ரோஹித் சர்மாவை சந்தித்தது மறக்க முடியாத அனுபவம்: அக்ஷரா குப்தா

இந்தச் சந்திப்பு தனக்கு மறக்க முடியாத அனுபவமாக அமைந்ததாக அக்ஷரா தெரிவித்துள்ளார்.

புதுடெல்லி,

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் ரோஹித் சர்மாவைச் சந்தித்த இளம் வீராங்கனை அக்ஷரா குப்தா, அவரிடம் கிரிக்கெட் தொடர்பான ஆலோசனைகளைப் பெற்றுள்ளார். இந்தச் சந்திப்பு தனக்கு மறக்க முடியாத அனுபவமாக அமைந்ததாக அக்ஷரா தெரிவித்துள்ளார்.

15 வயதான அக்ஷரா குப்தா, இளையோர் கிரிக்கெட்டில் தனது அதிரடியான பேட்டிங் மூலம் அனைவரின் கவனத்தையும் ஈர்த்து வருகிறார். குறிப்பாக, பீகார் மகளிர் யு-19 ஒருநாள் கிரிக்கெட் தொடரில் அவர் அடித்த முச்சதம், அவரை கிரிக்கெட் ரசிகர்கள் மத்தியில் பிரபலமாக்கியது.

இந்தச் சந்திப்பு தொடர்பான வீடியோவை அக்ஷரா தனது சமூக வலைதளப் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். ரோஹித் சர்மாவிடமிருந்து கிரிக்கெட், மனநிலை மற்றும் சாம்பியன் வீரர்களின் அணுகுமுறை குறித்து மதிப்புமிக்க ஆலோசனைகளைப் பெற்றதாக அவர் மகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளார்.

இந்திய கிரிக்கெட்டில் மிகப்பெரிய சாதனைகளைப் படைத்துள்ள ரோஹித் சர்மாவைச் சந்தித்தது, தனது கிரிக்கெட் பயணத்தில் உத்வேகம் அளிக்கும் அனுபவமாக இருந்ததாக அக்ஷரா குறிப்பிட்டுள்ளார்.

SCROLL FOR NEXT