கிரிக்கெட்

மேஜர் லீக் கிரிக்கெட்: நியூயார்க் - சியாட்டில் நாளை மோதல்

மேஜர் லீக் டி20 கிரிக்கெட் தொடர் அமெரிக்காவில் நடைபெற்று வருகிறது.

வாஷிங்டன்,

4வது மேஜர் லீக் டி20 கிரிக்கெட் தொடர் அமெரிக்காவில் கடந்த மாதம் 18 தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. இத்தொடரில் 6 அணிகள் பங்கேற்றுள்ளன. இதில் புள்ளிப்பட்டியலில் முதல் 4 இடங்களை பிடிக்கும் அணிகள் அடுத்த சுற்றுக்கு முன்னேறும்.

நியூயார்க் - சியாட்டில் மோதல்

இந்நிலையில், மேஜர் லீக் கிரிக்கெட் தொடரில் நாளை நடைபெறும் 25வது லீக் ஆட்டத்தில் எம்.ஐ. நியூயார்க் - சியாட்டில் ஓர்காஸ் மோத உள்ளன.

இந்திய நேரப்படி அதிகாலை 2 மணிக்கு இந்த ஆட்டம் தொடங்குகிறது. டெல்லஸ் நகரில் நடைபெறும் இந்த ஆட்டத்தில் நிகோலஸ் பூரான் தலைமையிலான நியூயார்க் அணியும், மார்கஸ் ஸ்டாய்னஸ் தலைமையிலான சியாட்டில் அணியும் மோதுகின்றன. இப்போட்டியில் வெற்றிபெற இரு அணிகளும் போராடும் என்பதால் இந்த ஆட்டத்தில் பரபரப்பிற்கு பஞ்சமிருக்காது.