கிரிக்கெட்

இங்கிலாந்து அணியின் பேட்டிங் பயிற்சியாளர் பதவி... நிராகரித்த மைக் ஹசி

இங்கிலாந்து டெஸ்ட் அணியின் தலைமைப் பயிற்சியாளர் பொறுப்பில் இருந்து சமீபத்தில் மெக்கல்லம் விலகினார்.

சென்னை,

இங்கிலாந்து டெஸ்ட் அணியின் பேட்டிங் பயிற்சியாளர் பதவியை ஏற்குமாறு இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் விடுத்த கோரிக்கையை ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் நட்சத்திர வீரர் மைக் ஹசி நிராகரித்துள்ளார்.

ஸ்டீபன் பிளெமிங்

தொடர் தோல்விகள் காரணமாக இங்கிலாந்து டெஸ்ட் அணியின் தலைமைப் பயிற்சியாளர் பொறுப்பில் இருந்து சமீபத்தில் மெக்கல்லம் விலகினார். இதையடுத்து இங்கிலாந்து டெஸ்ட் அணியின் புதிய தலைமைப் பயிற்சியாளராக ஸ்டீபன் பிளெமிங் நியமிக்கப்பட்டார்.

மைக் ஹசி நிராகரிப்பு

இதற்கிடையில், ஆஸ்திரேலியா மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் முன்னாள் வீரரான மைக் ஹசியிடம், இங்கிலாந்து அணியின் பேட்டிங் பயிற்சியாளர் பதவி குறித்து கடந்த மாதம் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டதாக கூறப்படுகிறது. இந்நிலையில், அந்த வாய்ப்பை அவர் ஏற்க மறுத்துள்ளதாக தகவல் வெளியாகி இருக்கிறது.

மேலும், ஆஸ்திரேலிய ஆண்கள் கிரிக்கெட் அணியின் ஆலோசகராக பணியாற்ற ஹசி முடிவு செய்துள்ளதாகவும் கூறப்படுகிறது.

ஏற்கெனவே பணியாற்றிய ஹசி

மைக் ஹசி இதற்கு முன்பு, 2022-ம் ஆண்டு இங்கிலாந்து அணி டி20 உலகக் கோப்பையை வென்றபோது, பகுதி நேர ஆலோசகராக பணியாற்றினார் என்பது குறிப்பிடத்தக்கது.

SCROLL FOR NEXT