டல்லாஸ்,
ஐ.சி.சி. ஆண்கள் கிரிக்கெட் உலகக் கோப்பை லீக்-2 தொடரில் அமெரிக்கா அணி சாதனை வெற்றியை பதிவு செய்துள்ளது.
டல்லாஸில் நேற்று நடைபெற்ற ஐசிசி ஆண்கள் கிரிக்கெட் உலகக் கோப்பை லீக் 2 போட்டியில் அமெரிக்க - யுஏஇ அணிகள் மோதின. இந்த ஆட்டத்தில் முதலில் பேட்டிங் செய்த யு.ஏ.இ. அணி 50 ஓவர்களில் 8 விக்கெட்டுகளை இழந்து 330 ரன்கள் குவித்தது.
இதையடுத்து இந்த இலக்கை நோக்கி களமிறங்கிய அமெரிக்க அணிக்கு மிலிந்த் குமார் அபாரமாக ஆடினார். வெறும் 84 பந்துகளை எதிர்கொண்ட அவர், 7 பவுண்டரிகள் மற்றும் 5 சிக்ஸர்களுடன் ஆட்டமிழக்காமல் 116 ரன்கள் விளாசினார். இதன் மூலம் ஒருநாள் கிரிக்கெட்டில் தனது 5-வது சதத்தையும் பதிவு செய்தார்.இதன் மூலம் 330 ரன்கள் என்ற இலக்கை அமெரிக்கா அணி 48.5 ஓவர்களில் எட்டியது.
இந்த ஆட்டத்தில் 5 சிக்ஸர்கள் விளாசியதன் மூலம் மிலிந்த் குமார், அமெரிக்க அணிக்காக ஒருநாள் போட்டிகளில் அதிக சிக்ஸர்கள் அடித்த வீரர் என்ற சாதனையை படைத்துள்ளார்.
அமெரிக்க அணிக்காக ஒருநாள் போட்டிகளில் அதிக சிக்ஸர்கள் அடித்த வீரர்கள்
மிலிந்த் குமார் – 38 சிக்ஸர்கள்
மோனங்க் படேல் – 34 சிக்ஸர்கள்
ஆரோன் ஜோன்ஸ் – 32 சிக்ஸர்கள்
சாய் தேஜா முக்காமல்லா – 28 சிக்ஸர்கள்
ஸ்டீவன் கெய்லர் – 27 சிக்ஸர்கள்