கிரிக்கெட்

இந்தியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடர்: நியூ. வீரர் மிட்செல் சாண்ட்னர் விலகல்

டெஸ்ட் போட்டி நாளை வெல்லிங்டன் மைதானத்தில் நாளை நடைபெற உள்ளது.

வெல்லிங்டன்,

இந்தியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் இருந்து நியூசிலாந்து வீரர் மிட்செல் சாண்ட்னர் விலகியுள்ளார்.

இந்தியா - நியூசிலாந்து

இந்திய கிரிக்கெட் அணி நியூசிலாந்து சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 ஒருநாள், 5 டி20, 2 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது.

இதில் டி20 தொடரை 3-2 என்ற கணக்கில் கைப்பற்றிய இந்தியா ஒருநாள் தொடரையும் 3-1 என்ற கணக்கில் கைப்பற்றியது.

இதனிடையே, இந்தியா, நியூசிலாந்து இடையேயான முதல் டெஸ்ட் போட்டி நாளை வெல்லிங்டன் மைதானத்தில் நாளை நடைபெற உள்ளது.

சாண்ட்னர் விலகல்

இந்நிலையில், இந்தியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் இருந்து நியூசிலாந்து வீரர் மிச்செல் சாண்ட்னர் விலகியுள்ளார்.

கடைசி ஒருநாள் போட்டியின் போது சாண்ட்னர் கையில் காயம் ஏற்பட்டது. இதையடுத்து நடைபெற்ற மருத்துவ பரிசோதனையில் சாண்ட்னர் ஓய்வு எடுக்க அறிவுறுத்தப்பட்டது. இதனை தொடர்ந்து இந்தியாவுக்கு எதிரான 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் இருந்து மிச்செல் சாண்ட்னர் விலகியுள்ளார்.

அவருக்கு பதிலாக டீன் பாக்ஸ்கிராப்ட் களமிறங்குகிறார். இந்தியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் நியூசிலாந்து கேப்டனாக டாம் லாதம் செயல்பட உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

SCROLL FOR NEXT