கிரிக்கெட்

காயம் காரணமாக மொமினுல் ஹக் விலகல் – 2வது டெஸ்டில் அமிட் ஹசனுக்கு வாய்ப்பு

உள்ளூர் கிரிக்கெட்டில் சிறப்பான ரன்களைக் குவித்து வந்துள்ளார்.

வங்கதேச அணியின் அனுபவமிக்க பேட்ஸ்மேன் மொமினுல் ஹக், வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் இருந்து காயம் காரணமாக விலகியுள்ளார். முதல் டெஸ்ட் போட்டியின் மூன்றாவது நாளில் ஃபீல்டிங் செய்துகொண்டிருந்தபோது தலையில் காயம் ஏற்பட்டது. இதையடுத்து, அந்தப் போட்டியின் எஞ்சிய ஆட்டத்தில் அவருக்குப் பதிலாக ஜாகர் அலி களமிறங்கினார்.

மொமினுல் ஹக்

இரண்டாவது டெஸ்ட் போட்டியில் மொமினுல் ஹக் விளையாட முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் அவருக்குப் பதிலாக வலதுகை பேட்ஸ்மேனான அமிட் ஹசனை வங்கதேச கிரிக்கெட் வாரியம் அணியில் சேர்த்துள்ளது. இவர் ஏற்கெனவே ஜிம்பாப்வே அணிக்கு எதிராக தனது முதல் டெஸ்ட் போட்டியில் விளையாடியுள்ளார். மேலும், உள்ளூர் கிரிக்கெட்டில் சிறப்பான ரன்களைக் குவித்து வந்துள்ளார்.

முதல் டெஸ்ட் போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று தொடரில் 1-0 என முன்னிலை வகிக்கிறது. எனவே, இரண்டாவது டெஸ்டில் வெற்றி பெற்று தொடரைச் சமன் செய்யும் முனைப்புடன் வங்கதேச அணி களமிறங்க உள்ளது

SCROLL FOR NEXT