ஐதராபாத்,
10 அணிகள் இடையிலான 19-வது ஐ.பி.எல். கிரிக்கெட் தொடர் இந்தியா வின் பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது. நேற்று நடைபெற்ற ஆட்டத்தில் சன்ரைசர்ஸ் ஐதராபாத், ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் மோதின. இதில் ஐதராபாத் அணி வெற்றி பெற்றது.
ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் ஐதராபாத் வீரர் அபிஷேக் சர்மா டக் அவுட ஆகி ஏமாற்றம் அளித்தார். இதனால் ஒரே ஆண்டில் அதிக முறை (7) டக் அவுட் ஆன பேட்டர் என சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணி வீரர் அபிஷேக் சர்மா மோசமான சாதனை படைத்தார்.
ரோகித் சர்மா , சஞ்சு சாம்சனின் (6) டக் அவுட் என இருவரின் மோசமான சாதனையை முறியடித்துள்ளார்.