கிரிக்கெட்

நியூசிலாந்துக்கு எதிராக அதிக ரன்கள்: வரலாறு படைத்த விராட் கோலி

அதிக ரன்கள் குவித்த வீரர் என்ற பெருமையைப் பெற்றுள்ளார்.

இந்திய அணியின் நட்சத்திர பேட்ஸ்மேன் விராட் கோலி ஒருநாள் கிரிக்கெட்டில் மற்றொரு வரலாற்றுச் சாதனையைப் படைத்துள்ளார். நியூசிலாந்துக்கு எதிரான 2-வது ஒருநாள் போட்டியில் விளையாடிய அவர் 7 ரன்கள் எடுத்தார். இதனால் அந்த அணிக்கு எதிராக ஒருநாள் போட்டிகளில் அதிக ரன்கள் குவித்த வீரர் என்ற பெருமையைப் பெற்றுள்ளார். இதற்கு முன்பு இந்தச் சாதனையை ஆஸ்திரேலிய முன்னாள் கேப்டன் ரிக்கி பாண்டிங் 1,971 ரன்களுடன் தன்வசம் வைத்திருந்தார். முதல் ஒருநாள் போட்டியில் 74 ரன்கள் எடுத்ததன் மூலம் பாண்டிங்கின் சாதனையை சமன் செய்திருந்த கோலி, தற்போது அவரை முந்தி முதலிடத்தைப் பிடித்துள்ளார். இதன் மூலம் நியூசிலாந்துக்கு எதிரான ஒருநாள் போட்டிகளில் அதிக ரன்கள் எடுத்த வீரர் என்ற புதிய வரலாற்றை உருவாக்கியுள்ளார்

விராட் கோலி

விராட் கோலி நியூசிலாந்துக்கு எதிராக இதுவரை 37 ஒருநாள் போட்டிகளில் விளையாடி 1,978 ரன்கள் மேல் குவித்துள்ளார். இதில் 7 சதங்கள் மற்றும் 11 அரைசதங்கள் அடங்கும். ரிக்கி பாண்டிங் 1,971 ரன்களுடன் இரண்டாவது இடத்திலும், இந்திய ஜாம்பவான் சச்சின் தெண்டுல்கர் 1,750 ரன்களுடன் மூன்றாவது இடத்திலும் உள்ளனர். தொடர்ந்து குமார் சங்கக்கரா 1,568 ரன்களுடனும், சனத் ஜெயசூர்யா 1,519 ரன்களுடனும் அடுத்தடுத்த இடங்களில் உள்ளனர்.

SCROLL FOR NEXT