கிரிக்கெட்

8-வது விக்கெட்டுக்கு அதிக ரன்கள் சேர்ப்பு: வெஸ்ட் இண்டீஸ் ஜோடி புதிய சாதனை

சர்வதேச டி20 கிரிக்கெட்டில் 8-வது விக்கெட்டுக்கு எடுக்கப்பட்ட அதிகபட்ச ரன்கள் இதுவாகும்.

அகமதாபாத்,

டி20 உலகக் கோப்பை சூப்பர் 8 சுற்றுப் போட்டியில் இன்று நடைபெற்ற ஆட்டத்தில் வெஸ்ட் இண்டீஸ் மற்றும் தென் ஆப்பிரிக்க அணிகள் மோதின. இந்த போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் அணி நிர்ணயித்த 177 ரன்கள் இலக்கை 16.1 ஓவர்களில் கடந்து தென் ஆப்பிரிக்க அணி அபார வெற்றி பெற்றது.

இந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த வெஸ்ட் இண்டீஸ் அணி, தென் ஆப்பிரிக்காவின் பந்துவீச்சை எதிர்கொள்ள முடியாமல் திணறியது. ஒரு கட்டத்தில் 83 ரன்களுக்கு 7 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. இந்த நிலையில் 8-வது விக்கெட்டுக்கு ஜோடி சேர்ந்த ஜேசன் ஹோல்டர் மற்றும் ரொமாரியோ ஷெப்பர்ட் ஆட்டத்தின் போக்கையே மாற்றினர். இருவரும் இணைந்து அதிரடியாக விளையாடி 89 ரன்கள் சேர்த்தனர்.

இதன் மூலம் சர்வதேச டி20 கிரிக்கெட்டில் 8-வது விக்கெட்டுக்கு எடுக்கப்பட்ட அதிகபட்ச ரன்கள் இதுவாகும். இதற்கு முன்பு 2022-ல் நமீபியா அணி 8-வது விக்கெட்டுக்கு 70 ரன்கள் எடுத்ததே அதிகபட்சமாக இருந்தது. இந்த சாதனையை ஹோல்டர் - ஷைபர்ட் ஜோடி முறியடித்துள்ளது.