கிரிக்கெட்

ஒரே போட்டியில் அதிக சிக்ஸர்கள்... ரோகித், ருதுராஜை முந்தி புதிய வரலாறு படைத்த வைபவ்

23 சிக்ஸர்கள் அடித்ததே சாதனையாக இருந்தது.

தோஹா,

ரைசிங் ஸ்டார்ஸ் ஆசியக் கோப்பை 2026 கிரிக்கெட் தொடரில் ஐக்கிய அரபு அமீரக ஏ அணிக்கு எதிரான போட்டியில் இந்தியா ஏ அணியின் இளம் வீரர் வைபவ் சூரியவன்ஷி புதிய வரலாறு படைத்துள்ளார்.

ஒரே இன்னிங்ஸில் 28 சிக்ஸர்கள்

இந்தப் போட்டியில் 28 சிக்ஸர்கள் விளாசியதன் மூலம் லிஸ்ட் ஏ கிரிக்கெட்டில் ஒரு இன்னிங்ஸில் அதிக சிக்ஸர்கள் அடித்த வீரர் என்ற சாதனையை வைபவ் படைத்துள்ளார்.

இதற்கு முன்பு ஆஸ்திரேலியாவின் டார்சி ஷார்ட் 2018-ம் ஆண்டு வெஸ்டர்ன் ஆஸ்திரேலியா அணிக்காக குயின்ஸ்லாந்துக்கு எதிராக 23 சிக்ஸர்கள் அடித்ததே சாதனையாக இருந்தது. தற்போது அந்த சாதனையை வைபவ் முறியடித்துள்ளார்.

ரோகித் சர்மா, ருதுராஜ் சாதனை

லிஸ்ட் ஏ கிரிக்கெட்டில் ஒரு இன்னிங்ஸில் அதிக சிக்ஸர்கள் அடித்த இந்திய வீரர்கள் பட்டியலில் ரோகித் சர்மா மற்றும் ருதுராஜ் கெய்க்வாட் ஆகியோர் தலா 16 சிக்ஸர்களுடன் முதலிடத்தில் இருந்தனர். தற்போது 28 சிக்ஸர்கள் அடித்த வைபவ் இருவரையும் முந்தியுள்ளார்.

52 பந்துகளில் இரட்டை சதம்

இந்தப் போட்டியில் 28 பந்துகளில் சதம் அடித்த வைபவ், 52 பந்துகளில் இரட்டை சதத்தையும் எட்டினார். இதன் மூலம் லிஸ்ட் ஏ கிரிக்கெட்டில் அதிவேக சதம் மற்றும் அதிவேக இரட்டைச் சதம் ஆகிய சாதனைகளையும் படைத்தார்.

இந்தியா ஏ அணி அபார வெற்றி

யுஏஇ ஏ அணி முதலில் பேட்டிங் செய்து 50 ஓவர்களில் 8 விக்கெட் இழப்புக்கு 249 ரன்கள் எடுத்தது. 250 ரன்கள் என்ற இலக்கை துரத்திய இந்தியா ஏ அணி, வைபவின் அதிரடியால் 14.2 ஓவர்களில் 3 விக்கெட் இழப்புக்கு 254 ரன்கள் எடுத்து 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

SCROLL FOR NEXT