ராஞ்சி,
இந்திய கிரிக்கெட் அணி, சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் முன்னாள் கேப்டன் தோனி. இவர் தனது சொந்த ஊரான ஜார்க்கண்ட் மாநிலம் ராஞ்சியில் வசித்து வருகிறா. தற்போது ஐபிஎல் தொடருக்காக சென்னை வந்துள்ள தோனி தீவிர பயிற்சியில் ஈடுபட்டு வருகிறார்.
இதனிடையே, பைக், கார்கள் மீது ஆர்வம் கொண்ட தோனி அவ்வப்போது ராஞ்சியில் உள்ள சாலைகளில் பயணம் செய்யும் வீடியோக்கள் சமூகவலைதளத்தில் வைரலாகி வருகிறது.
இந்நிலையில், ராஞ்சியில் உள்ள சாலையில் காரில் வேகமாக சென்றதாக தோனிக்கு ரூ. 1,000 அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. ராஞ்சி சாலையில் நிர்ணயிக்கப்பட்ட வேகத்தை விட தோனி காரில் வேகமாக சென்றுள்ளார்.
இது தொடர்பாக சாலையில் பொருத்தப்பட்டுள்ள அதிநவீன கண்காணிப்பு கேமரா மூலம் பதிவான காட்சிகள் அடிப்படையில் தோனிக்கு தானியங்கு முறையில் ரூ. 1,000-க்கான அபராத ரசீது விநியோகிக்கப்படுள்ளது.