மும்பை,
19-வது ஐ.பி.எல். கிரிக்கெட் திருவிழா இறுதி கட்டத்தை நெருங்கி விட் டது. பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ், குஜராத் டைட்டன்ஸ், ஐதராபாத் சன் ரைசர்ஸ் ஆகிய அணிகள் அடுத்த சுற்றுக்கு (பிளே-ஆப்) முன்னேறி விட்டன. மீதமுள்ள ஒரு 'பிளே-ஆப்' சுற்றுக்கு முன்னேறுவது யார்? என் பது இன்று தெரியவரும்.
இந்த போட்டி தொடரில் இன்றுடன் (ஞாயிற்றுக்கிழமை) லீக் சுற்று ஆட் டம் முடிவடைகிறது. இன்று இரண்டு ஆட்டங்கள் அரங்கேறுகின்றன. இதில் மும்பை வான்கடே ஸ்டேடியத்தில் மாலை நடைபெ றும் 69-வது லீக் ஆட்டத்தில் 5 முறை சாம்பியனான மும்பை இந்தி யன்ஸ் அணி, முன்னாள் சாம்பியனான ராஜஸ்தான் ராயல்சை எதிர் கொள்கிறது.
இந்த போட்டிக்கான டாஸ் போடப்பட்டது. அதில் டாஸ் வென்ற மும்பை அணியின் கேப்டன் ஹர்திக் பாண்டியா பந்துவீச்சை தேர்வு செய்தார். அதன்படி ராஜஸ்தான் அணி முதலில் பேட்டிங் செய்கிறது.