கிரிக்கெட்

மும்பை அணியின் புதிய கேப்டன் ரோஹித் சர்மாவா? - வெளியான புகைப்படத்தால் எதிர்பார்ப்பு

மும்பை இந்தியன்ஸ் அணிக்கு ஐந்து ஐபிஎல் கோப்பைகளை வென்று கொடுத்ததில் முக்கியப் பங்கு வகித்தவர் ரோஹித் சர்மா.

மும்பை ,

ரோஹித் சர்மா மீண்டும் மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டனாக பொறுப்பேற்கப் போகிறாரா என்ற கேள்வி எழுந்துள்ளது.

கேப்டன் பதவி காலியானது எப்படி?

கடந்த சீசனில் மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டனாக இருந்த ஹர்திக் பாண்டியா, வர்த்தகப் பரிமாற்றம் மூலம் பஞ்சாப் கிங்ஸ் அணிக்கு மாறியநிலையில், மும்பை அணியின் கேப்டன் பதவி காலியாகியுள்ளது.

இதற்கிடையே, சூர்யகுமார் யாதவ் மற்றும் ஜஸ்பிரித் பும்ரா ஆகியோர் தங்களது பணிச்சுமை மற்றும் தனிப்பட்ட இலக்குகள் காரணமாக கேப்டன் பொறுப்பை ஏற்கத் தயக்கம் காட்டுயதாக தெரிகிறது.

புகைப்படம்

இந்நிலையில், மும்பை இந்தியன்ஸ் அணியின் புதிய கேப்டன் யார் என்ற கேள்வி ரசிகர்களிடையே எழுந்துள்ள நிலையில், அந்த அணி நிர்வாகம் சமூக வலைத்தளங்களில் வெளியிட்டுள்ள புதிய புகைப்படம் ரோஹித் சர்மா மீண்டும் கேப்டனாக பொறுப்பேற்கப் போகிறாரா என்ற கேள்வியை எழுப்பியுள்ளது.

மீண்டும் ரோஹித் சர்மாவுக்கு வாய்ப்பு?

மும்பை இந்தியன்ஸ் அணிக்கு ஐந்து ஐபிஎல் கோப்பைகளை வென்று கொடுத்ததில் முக்கியப் பங்கு வகித்தவர் ரோஹித் சர்மா. இதனால், 2027-ம் ஆண்டு ஐபிஎல் தொடரில் அவர் மீண்டும் அணியின் கேப்டனாக களமிறங்குவார் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

இருப்பினும், புதிய கேப்டன் குறித்த அதிகாரபூர்வ அறிவிப்பை மும்பை இந்தியன்ஸ் நிர்வாகம் இதுவரை வெளியிடவில்லை. தற்போதைய புகைப்படம் இந்த எதிர்பார்ப்பை மேலும் அதிகரித்துள்ளது

SCROLL FOR NEXT