மும்பை,
டிரெண்ட் போல்ட்டை மும்பை விடுவித்தது சரியான முடிவுதான் என இந்திய முன்னாள் ஆல்ரவுண்டர் இர்பான் பதான் தெரிவித்துள்ளார்.
ஐபிஎல் அணிகளின் தக்கவைப்பு மற்றும் விடுவிப்பு பட்டியல்கள் வெளியாவதற்கு முன்பே, பஞ்சாப் கிங்ஸ் அணியுடன் நடைபெற்ற டிரேடு மூலம் அர்ஷ்தீப் சிங்கை மும்பை இந்தியன்ஸ் அணி வாங்கியது.
இதற்கு மாற்றாக, மும்பை அணியின் கேப்டனும் நட்சத்திர ஆல்ரவுண்டருமான ஹர்திக் பாண்ட்யாவை பஞ்சாப் கிங்ஸ் அணி ரூ.18 கோடிக்கு வாங்கியது. அர்ஷ்தீப் சிங்கும் தனது முந்தைய ஊதியமான ரூ.18 கோடியிலேயே மும்பை அணிக்காக விளையாட உள்ளார்.
இதையடுத்து, மினி ஏலத்திற்கு முன்பாக மும்பை இந்தியஸ் அணி பல வீரர்களை விடுவித்தது. அதில் நியூசிலாந்து வேகப்பந்து வீச்சாளர் டிரெண்ட் போல்ட்டும் ஒருவர்.
இந்நிலையில், இந்திய டி20 அணியின் முன்னணி பந்துவீச்சாளரான அர்ஷ்தீப் சிங் அணிக்கு வந்துள்ளதால், டிரெண்ட் போல்ட்டை விடுவித்தது சரியான முடிவுதான் என இந்திய முன்னாள் ஆல்ரவுண்டர் இர்பான் பதான் தெரிவித்துள்ளார்.
கடந்த சீசனில் போல்ட் 5 போட்டிகளில் விளையாடி 2 விக்கெட்டுகளை மட்டுமே கைப்பற்றியிருந்தார். இதனால் அவரை விடுவித்தது சரியான முடிவு என அவர் குறிப்பிட்டார்.
மேலும், தீபக் சாஹரை விடுவித்ததும் சரியான முடிவுதான் என்று தெரிவித்தார். கடந்த 5 முதல் 6 ஆண்டுகளில் தீபக் சாஹர் முழு சீசனிலும் தொடர்ந்து விளையாடுவது அரிதாக இருந்ததாகவும், மும்பை அணி புதிய பந்தில் பந்துவீசுவதற்கான மாற்று வீரரை ஏற்கெனவே உறுதி செய்துவிட்டதாகவும் கூறினார்.
ஆப்கானிஸ்தான் சுழற்பந்து வீச்சாளர் அல்லா கஸன்பரை மும்பை இந்தியன்ஸ் அணி விடுவித்தது தனக்கு ஆச்சரியமளிப்பதாக இர்பான் பதான் தெரிவித்துள்ளார்.