கிரிக்கெட்

மும்பை அணி பந்துவீச்சு பயிற்சியாளர் மலிங்கா விலகல்

பயிற்சியாளர்கள் குழுவில் இருந்து விலகி உள்ளனர்.

மும்பை,

ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டிக்கான மும்பை இந்தியன்ஸ் அணியின் தலைமை பயிற்சியாளர் பதவியில் இருந்து இலங்கை முன்னாள் கேப்டன் மஹேலா ஜெயவர்த்தனே அண்மையில் விலகினார். அவருக்கு பதிலாக வெஸ்ட் இண்டீஸ் ஆல்-ரவுண்டர் பொல்லார்ட் நியமிக்கப்பட்டு இருக்கிறார். இந்த நிலையில் மும்பை இந்தியன்ஸ் அணியின் பயிற்சியாளர்கள் குழுவில் இருந்து 3 பேர் பரஸ்பர சம்மதத்துடன் விலகி உள்ளனர்.

மலிங்கா

வேகப்பந்து வீச்சு பற்சியாளராக இருந்த இலங்கை முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் மலிங்கா, இந்திய முன்னாள் வீரர் பராஸ் மாம்ப்ரே, பீல்டிங் பயிற்சியாளராக பணியாற்றிய இங்கி லாந்து முதல் தர கிரிக்கெட் வீரர் கார்ல் ஹாப்கின்சன் ஆகியோர் தங்கள் பொறுப்பில் இருந்து ஒதுங்கி இருக்கின்றனர்.

SCROLL FOR NEXT