கிரிக்கெட்

மும்பை அணி பயிற்சியாளர் பொல்லார்டுக்கு அபராதம் விதிப்பு

6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் மும்பை அணி வெற்றி பெற்றது.

தர்மசாலா,

ஐ.பி.எல். கிரிக்கெட் தொடரில் இமாசலபிரதேசத்தில் உள்ள தர்மசாலாவில் நேற்று நடைபெற்ற 58-வது லீக் ஆட்டத்தில் பஞ்சாப் கிங்ஸ் அணி, 5 முறை சாம்பியனான மும்பை இந்தியன்சை எதிர்கொண்டது.

முதலில் பேட்டிங் செய்த பஞ்சாப் அணி 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட்டுகள் இழப்பிற்கு பஞ்சாப் அணி 200 ரன்கள் எடுத்தது. பின்னர் மும்பை அணி 19.5 ஓவர்களில் 4 விக்கெட்டுகளை இழந்து 205 ரன்கள் எடுத்தது. இதன்மூலம் பஞ்சாப் அணிக்கு எதிரான போட்டியில் 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் மும்பை அணி வெற்றி பெற்றது.

இந்த நிலையில், போட்டியின் நடுவே 4வது நடுவரை தரக்குறைவாக பேசியதாக மும்பை அணியின் பேட்டிங் பயிற்சியாளர் பொல்லார்டுக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

போட்டிக் கட்டணத்தில் இருந்து 15 சதவீதம் அபராதமாக விதிக்கப்பட்டுள்ளது. 4வது நடுவரை தரக்குறைவான வார்த்தைகளில் பேசியதால் அபராதமும், ஒரு தகுதி இழப்பு புள்ளியும் அவருக்கு வழங்கப்பட்டது.