கிரிக்கெட்

பி.எஸ்.எல்-க்கு ‘நோ’ சொன்ன முசராபானி- பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் அதிரடி நடவடிக்கை

முசராபானி பி.எஸ்.எல். போட்டியில் இருந்து விலகிய அவர் கொல்கத்தா அணியில் இணைந்து விளையாடி வருகிறார்.

இந்த சீசனுக்கான பாகிஸ்தான் சூப்பர் லீக் (பி.எஸ்.எல்.) 20 ஓவர் கிரிக்கெட் போட்டிக்கான இஸ்லாமாபாத் யுனைடெட் அணியில் ஜிம்பாப்வே அணியின் வேகப்பந்து வீச்சாளரான பிளெசிங் முசராபானி மாற்று வீரராக ஒப்பந்தம் செய்யப்பட்டிருந்தார். அந்த சமயத்தில் அவருக்கு ஐ.பி.எல். போட்டிக்குரிய கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியில் சேர அழைப்பு விடுக்கப்பட்டது. இதனால் பி.எஸ்.எல். போட்டியில் இருந்து விலகிய அவர் கொல்கத்தா அணியில் இணைந்து விளையாடி வருகிறார்.

இதற்கிடையே, பாகிஸ்தான் சூப்பர் லீக் ஒப்பந்தத்தை மதிக்காமல் ஒதுங்கியவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் எச்சரிக்கை விடுத்து இருந்தது. இந்த நிலையில் அணியின் ஒப்பந்தத்தை மீறி செயல்பட்ட பிளெசிங் முசராபானிக்கு பாகிஸ்தான் சூப்பர் லீக்கில் விளையாட 2 ஆண்டு தடை விதித்து பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் நடவடிக்கை எடுத்துள்ளது.