கொல்கத்தா,
10 அணிகள் பங்கேற்கும் 19-வது ஐ.பி.எல். தொடர் 28-ந்தேதி முதல் மே 31-ந்தேதி வரை இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடைபெறுகிறது. இதையொட்டி, 10 அணி வீரர்களும், இப்போதே பயிற்சியை தொடங்கிவிட்டனர்.
இந்த தொடருக்கு முன்னதாக கொல்கத்தா அணியில் இருந்து வங்காளதேச வேகப்பந்து வீச்சாளர் முஸ்தாபிசுர் ரஹ்மான் விடுவிக்கப்பட்டார். வங்காளதேசதில் இந்துக்கள் மீது தாக்குதல்கள் நடத்தப்பட்டு வந்த சூழலில் முஸ்தபிசுர் ரஹ்மான் விடுவிக்கப்பட வேண்டும் என இந்து அமைப்புகள் தெரிவித்தன. இதனைத்தொடர்ந்து பிசிசிஐ அவரை விடுவிக்குமாறு கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கு கோரிக்கை விடுத்தது. அதனை தொடர்ந்து கேகேஆர் அணி அவரை விடுவித்தது.
இதனையடுத்து அவருக்கு பதிலாக ஜிம்பாப்வே அணியின் வேகப்பந்து வீச்சாளர் பிளெசிங் முசரபானி அணியில் இணைந்துள்ளார்.
இந்நிலையில் கொல்கத்தா அணியால் விடுவிக்கப்பட்ட வங்கதேச வீரர் முஸ்தாபிசுர் ரஹ்மான், தற்போது பிஎஸ்எல் 2026 தொடரில் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். கொல்கத்தா அணியில் இருந்து நீக்கப்பட்ட நிலையில் பாகிஸ்தான் பிரீமியர் லீக்கில் விளையாட உள்ளார்.