புதுடெல்லி,
ஆப்கானிஸ்தான் அணியின் அனுபவமிக்க ஆல்ரவுண்டர் முகமது நபி, இனி வரும் தொடர்களுக்கான அணியின் திட்டங்களில் தொடர்ந்து இடம்பெறுவார் என்று ஆப்கானிஸ்தான் அணியின் தலைமை நிர்வாகி பிலிப் பைபஸ் தெரிவித்துள்ளார்.
சர்வதேச கிரிக்கெட்டில் நீண்ட கால அனுபவம் கொண்ட நபி, ஆப்கானிஸ்தான் அணியின் முக்கிய வீரர்களில் ஒருவராக இருந்து வருகிறார். அவரது அனுபவமும் ஆல்ரவுண்டர் திறமையும் அணிக்கு தொடர்ந்து தேவையாக இருப்பதாக பைபஸ் கூறியுள்ளார். குறிப்பாக இளம் வீரர்கள் அதிகளவில் அணியில் இடம்பிடித்து வரும் நிலையில், நபியின் அனுபவம் அணிக்கு முக்கியமானதாக இருக்கும் என ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் நிர்வாகம் கருதுகிறது.
இதனால் நபி விரைவில் அணியில் இருந்து ஓரங்கட்டப்படுவார் என்ற பேச்சுகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் பைபஸின் கருத்து அமைந்துள்ளது.