கிரிக்கெட்

நமன் திர் பேட்டிங் அருமையாக இருந்தது: ஷ்ரேயாஸ் அய்யர்

பரபரப்பான இறுதி ஓவரை வேகப்பந்து வீச்சாளர் மேட் ஹென்றி வீசினார்.

கிறிஸ்ட்சர்ச்,

நியூசிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணி 5 போட்டிகள் கொண்ட 20 ஓவர் தொடரில் ஆடுகிறது. இதன் முதலாவது 20 ஓவர் போட்டி கிறைஸ்ட்சர்ச்சில் உள்ள ஹாக்லே ஓவல் ஸ்டேடியத்தில் நேற்று நடந் தது. 'டாஸ்' ஜெயித்த இந்திய கேப்டன் ஸ்ரேயாஸ் அய்யர் முதலில் பந்து வீசுவதாக அறிவித்தார்.

இதன்படி முதலில் பேட் செய்த நியூசிலாந்து அணிக்கு டிம் செய்பெர்ட்டும் (24 ரன்), பின் ஆலெனும் (45 ரன்) சிறப் பான தொடக்கம் தந்தனர். அடுத்து வந்த டேரில் மிட்செல் 28 ரன் எடுத்தார்.4-வது விக்கெட்டுக்கு கிளென் பிலிப்சும், பெவன் ஜேக்கப்சும் கைகோர்த்து இந்திய பந்து வீச்சை துவம்சம் செய்த னர். மயங்க் யாதவ், அக்ஷர் பட்டேலின் ஒவர்களில் சிக்சர், பவுண்டரிகள் ஓடின. இதனால் நியூசிலாந்து 200-ஐ எளி தில் தாண்டியது. ஜேக்கப்ஸ் 31 ரன்களில் (16 பந்து, 3 சிக்சர்) ரன்-அவுட் ஆனார்.20 ஓவர் முடிவில் நியூசிலாந்து அணி 4 விக்கெட்டுக்கு 225 ரன்கள் குவித்தது. இந்தியாவுக்கு எதிராக தங்களது முந் தைய அதிகபட்ச ஸ்கோரையும் நியூசிலாந்து சமன் செய்தது. 13-வது அரைசதத்தை எட்டிய பிலிப்ஸ் 82 ரன்களுடன் (40 பந்து, 8 பவுண்டரி, 3 சிக்சர்) களத்தில் இருந்தார்.

பின்னர் 226 ரன் என்ற இமாலய இலக்கை நோக்கி இந்தியாவின் தொடக்க ஆட்டக்காரர்களாக சஞ்சு சாம்சனும், அபி ஷேக் ஷர்மாவும் களம் புகுந்தனர். இருவரும் நியூசிலாந்து பந்து வீச்சை பொளந்து கட்டினர். பெர்குசன் ஓவரில் 2 பவுண்டரி, ஒரு சிக்சர், ஆடம் மில்னே பந்துவீச்சில் 2 பவுண்டரி, 2 சிக்சர் என ரன்மழை பொழிந்து ரசிகர்களை துள் ளல் போட வைத்தனர். முதல் விக்கெட்டுக்கு 93 ரன்கள் (5.5 ஓவர்) திரட்டி வலுவான அடித்தளமிட்டனர். அபிஷேக் ஷர்மா 29 ரன்களில் (12 பந்து, 2 பவுண்டரி, 3 சிக்சர்) கேட்ச் ஆனார். மறுமுனையில் தனது 11-வது அரைசதத்தை நிறைவு செய்த சாம்சன் 67 ரன்களில் (33 பந்து, 8 பவுண்டரி, 4 சிக்சர்) சான்ட்னெரின் சுழற்பந்தில் போல்டானார்.

அடுத்து வந்த திலக் வர்மா (6 ரன்), இஷான் கிஷன் (1 ரன்) சுழல் வலையில் சிக்கினர். 29 ரன் இடைவெளியில் 4 விக்கெட் சரிந்ததால் இந்தியா சற்று தடுமாற்றத்திற்குள்ளானது.இந்த நெருக்கடியான சூழலில் கேப்டன் ஸ்ரேயாஸ் அய்யரும். அக்ஷர் பட்டேலும் இணைந்து அணியை சிக்கலில் இருந்து மீட்டனர். அக்ஷர் பட்டேல் தனது பங்குக்கு 24 ரன்கள் (14 பந்து, 3 பவுண்டரி, ஒரு சிக்சர்) எடுத்தார்.

இதையடுத்து 6-வது விக்கெட்டுக்கு கேப்டன் ஸ்ரேயாஸ் அய்யருடன். ஆல்-ரவுண்டர் நமன் திர் கூட்டணி சேர்ந்தார். ஆட்டத்தை முன்னெடுத்து சென்ற இவர்கள் ஒன்று, இரண்டு ரன் வீதம் எடுப்பதிலும், ஏதுவான பந்துகளை எல்லைக் கோட்டுக்கு விரட்டுவதிலும் கச்சிதமாக செயல்பட்டனர். இந்தியாவுக்கு அதிர்ஷ்டமும் துணை நின்றது. ஸ்ரேயாஸ் அய் யருக்கு 27 ரன்னில் பின் ஆலென் சுலப கேட்ச் வாய்ப்பை கோட்டை விட்டார். 17-வது ஓவரில் சான்ட்னெரின் பந்து வீச்சில் 2 பவுண்டரி, ஒரு சிக்சர் உள்பட 19 ரன்கள் எடுத்தது ஆட்டத்தை இந்தியா பக்கம் முழுமையாக திருப்பியது.

ஸ்கோர் 210-ஆக உயர்ந்த போது ஸ்ரேயாஸ் அய்யர் 42 ரன்களில் (28 பந்து, ஒரு பவுண்டரி, 2 சிக்சர்) கேட்ச் ஆனார். அடுத்து நிதிஷ்குமார் ரெட்டி வந்தார்.

கடைசி ஓவரில் இந்தியாவின் வெற்றிக்கு 8 ரன் தேவைப்பட்டது. பரபரப்பான இறுதி ஓவரை வேகப்பந்து வீச்சாளர் மேட் ஹென்றி வீசினார். முதல் பந்தை பவுண்டரிக்கு விளாசி பதற்றத்தை தணித்த நமன் திர் 2-வது பந்தில் ஒரு ரன் னுக்கு ஓடினார். 3-வது பந்தில் நிதிஷ்குமார் ஒரு ரன் எடுத்தார். 4-வது பந்தை நமன் திர் சிக்சருக்கு தெறிக்கவிட்டு இலக்கை எட்ட வைத்தார்.

இந்திய அணி 19.4 ஓவர்களில் 6 விக்கெட்டுக்கு 230 ரன்கள் சேர்த்து 4 விக்கெட் வித்தியாசத்தில் திரில் வெற்றியை பெற்றது. 20 ஓவர் போட்டியில் இந்தியா விரட்டிப்பிடித்த அதிகபட்ச இலக்கு இதுவாகும்.

நமன் திர் 42 ரன்களுடனும் (15 பந்து, 5 பவுண்டரி, 2 சிக்சர்), நிதிஷ்குமார் ரெட்டி 2 ரன்னுடனும் களத்தில் இருந்தனர். எக்ஸ்டிரா வகையில் 16 வைடு உள்பட 17 ரன் கிடைத்தது. சாம்சன் ஆட்டநாயகன் விருதை பெற்றார்.

வெற்றிக்கு பிறகு இந்திய கேப்டன் ஸ்ரேயாஸ் அய்யர் கூறுகையில், 'இந்த வெற்றியால் இனி பயணச்சோர்வை மறந்து விடலாம் என்று நினைக்கிறேன். நாங்கள் பந்து வீச தொடங்கிய போது ஆடுகளம் சற்று மெதுவாக காணப்பட்டது. ஆனால் போக போக பனிப்பொழிவால் (ஆட்டம் உள்ளூர் நேரப்படி இரவு 8 மணிக்கு தொடங்கியது) ஆடுகளம் பேட்டிங்குக்கு சாதகமாக மாறியது. பந்து பேட்டுக்கு ஏதுவாக வந்தது. 220 ரன்களுக்கு மேலான இலக்கை துரத்தும் போது முதல் 6 ஓவர்களில் 80-85 ரன்கள் தேவை. அந்த வகையில் தொடக்க ஆட்டக்காரர்கள் சாம்சனும், அபிஷேக்கும் பிரமாதமான தொடக்கத்தை ஏற்படுத்தி கொடுத்த னர். அவர்கள் இருவரும் அனுபவம் வாய்ந்த வீரர்கள். எப்படி விளையாட வேண்டும் என்பதை சொல்ல வேண்டிய அவசிய மில்லை. நமர் திர் ஆல்-ரவுண்டராக இருப்பது சாதகமான விஷயம். அவர் பேட்டிங் செய்த விதத்தை பார்க்க மிகவும் அருமை யாக இருந்தது' என்றார்.

SCROLL FOR NEXT