விந்தோக்,
2வது ஒருநாள் போட்டியில் அயர்லாந்தை வீழ்த்தி நமீபியா அபார வெற்றிபெற்றது.
அயர்லாந்து கிரிக்கெட் அணி நமீபியாவுக்கு சுற்றுப்பயணம் 5 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடி வருகிறது. இதில் முதல் ஒருநாள் போட்டியில் நமீபியாவை வீழ்த்தி அயர்லாந்து அபார வெற்றிபெற்றது.
இந்நிலையில், இரு அணிகளுக்கும் இடையேயான 2வது ஒருநாள் போட்டி விந்தோக் நகரில் இன்று நடைபெற்றது. இப்போட்டியில் டாஸ் வென்ற அயர்லாந்து முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தது.
இதையடுத்து முதலில் பேட்டிங் செய்த நமீபியா 50 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட்டுகள் இழப்பிற்கு 321 ரன்கள் எடுத்தது. அந்த அணியின் கேப்டன் கெர்ஹார்டு எரஸ்மஸ் 156 ரன்கள் குவித்து இறுதிவரை ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்தார். அயர்லாந்து தரப்பில் அந்த அணியின் கவின் ஹொனே அதிபட்சமாக 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
இதனை தொடர்ந்து 322 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற கடினமான இலக்குடன் களமிறங்கிய அயர்லாந்து 47.3 ஓவர்களில் 290 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. அந்த அணியின் கேட்பன் பால் ஸ்டெர்லிங் அதிகபட்சமாக 77 ரன்கள் சேர்த்தார். நமீபியா தரப்பில் ஜாக் பிரசெல் அதிகபட்சமாக 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார். இதன் மூலம் அயர்லாந்தை 31 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி நமீபியா அபார வெற்றிபெற்றது.
இந்த வெற்றியின் மூலம் இரு அணிகளும் 1-1 என்ற புள்ளிகளுடன் சம நிலையில் உள்ளது. இரு அணிகளுக்கும் இடையேயான 3வது ஒருநாள் போட்டி வரும் செவ்வாய்கிழமை மதியம் 1 மணிக்கு நடைபெற உள்ளது.