விந்தோக்,
3வது ஒருநாள் போட்டியில் அயர்லாந்தை வீழ்த்தி நமீபியா அபார வெற்றிபெற்றது.
நமீபியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள அயர்லாந்து 5 போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடரில் விளையாடி வருகிறது.
இதில் 2 போட்டிகள் நடைபெற்ற நிலையில் தலா ஒரு வெற்றியுடன் இரு அணிகளும் 1-1 என்ற நிலையில் சம நிலையில் இருந்தன.
இந்நிலையில், இரு அணிகளுக்கும் இடையேயான 3வது ஒருநாள் போட்டி விந்தோக்கில் உள்ள மைதானத்தில் இன்று நடைபெற்றது. இதில் டாஸ் வென்ற நமீபியா முதலில் பேட்டிங் தேர்வு செய்தது.
அதன்படி களமிறங்கிய நமீபியா 50 ஓவர்கள் முடிவில் 7 விக்கேடுகள் இழப்பிற்கு 316 ரன்கள் குவித்தது. அந்த அணியின் ஜன் பிரேலிங் அதிகபட்சமாக 126 ரன்கள் குவித்தார். அயர்லாந்து தரப்பில் அந்த அணியின் அண்டி மெக்பிரைன், கெம்பர் அதிகபட்சமாக தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.
இதையடுத்து 317 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற கடினமான இலக்குடன் களமிறங்கிய அயர்லாந்து 44.5 ஓவரில் 253 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. இதன் மூலம் அயர்லாந்தை 63 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி நமீபியா அபார வெற்றிபெற்றது. அயர்லாந்து தரப்பில் அந்த அணியின் கெம்பர் அதிகபட்சமாக 106 ரன்கள் குவித்தார். நமீபியா தரப்பில் அந்த அணியின் பிரெனெட், ரூபன், ஜாக் தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தி அணியின் வெற்றிக்கு வழிவகுத்தனர்.
இந்த வெற்றியின் மூலம் 5 போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடரில் 2-1 என்ற கணக்கில் நமீபியா முன்னிலை பெற்றுள்ளது.