கிரிக்கெட்

4வது ஒருநாள் போட்டி: நமீபியா - அயர்லாந்து இன்று மோதல்

இந்திய நேரப்படி இன்று மதியம் 1 மணிக்கு இப்போட்டி தொடங்குகிறது.

விந்தோக்,

நமீபியா, அயர்லாந்து இடையேயான 4வது ஒருநாள் போட்டி இன்று நடைபெற உள்ளது.

நமீபியா - அயர்லாந்து

நமீபியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள அயர்லாந்து 5 போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடரில் விளையாடி வருகிறது. இதில் 3 போட்டிகள் நடைபெற்ற நிலையில் 2-1 என்ற புள்ளிகள் கணக்கில் நமீபியா முன்னிலையில் உள்ளது.

4வது ஒருநாள் போட்டி

இந்நிலையில், நமீபியா - அயர்லாந்து இடையேயான 4வது ஒருநாள் போட்டி இன்று நடைபெற உள்ளது. விந்தோக் நகரில் இந்திய நேரப்படி இன்று மதியம் 1 மணிக்கு இப்போட்டி தொடங்குகிறது.

இப்போட்டியில் வென்று பெற்று ஒருநாள் தொடரை கைப்பற்ற நமீபியாவும், தொடரை சமன் செய்ய அயர்லாந்தும் போராடும் என்பதால் இன்றைய ஆட்டத்தில் பரபரப்பிற்கு பஞ்சமிருக்காது.

SCROLL FOR NEXT