கிரிக்கெட்

பந்துவீச்சாளர்களுக்கு தெரியாமல் எப்படி நடந்தது? நாசர் ஹுசைன் கேள்வி...

டேவிட் வார்னர் மற்றும் கேமரூன் பான்கிராஃப்ட் ஆகிய மூவர் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டது.

ஆஸ்திரேலிய கிரிக்கெட்டில் கடந்த 2018ஆம் ஆண்டு தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான டெஸ்ட் தொடரின்போது நடைபெற்ற பந்தை சேதப்படுத்திய விவகாரம் (Sandpapergate) மீண்டும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இந்த விவகாரம் தொடர்பாக ஆஸ்திரேலிய வீரர் கேமரூன் பான்கிராஃப்ட் சமீபத்தில் வெளியிட்ட புதிய தகவல்களைத் தொடர்ந்து, முன்னாள் இங்கிலாந்து கேப்டன் நாசர் ஹுசைன், ஆஸ்திரேலிய கேப்டன் பாட் கம்மின்ஸின் விளக்கத்திற்கு கேள்வி எழுப்பியுள்ளார்.

2018ஆம் ஆண்டு தென்னாப்பிரிக்க சுற்றுப்பயணத்தின்போது பந்தை சேதப்படுத்திய விவகாரத்தில் ஸ்டீவ் ஸ்மித், டேவிட் வார்னர் மற்றும் கேமரூன் பான்கிராஃப்ட் ஆகிய மூவர் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டது.

இந்த விவகாரம் குறித்து கருத்து தெரிவித்த இங்கிலாந்து முன்னாள் கேப்டன் நாசர் ஹுசைன், பந்தை சேதப்படுத்தும் திட்டம் குறித்து தனக்கு எதுவும் தெரியாது என்று பாட் கம்மின்ஸ் கூறியதை ஏற்க முடியாத வகையில் கேள்வி எழுப்பியுள்ளார்.

அணியின் மீடியா மேலாளருக்கே இந்த விவகாரம் குறித்து தெரிந்திருக்கும்போது பந்துவீச்சாளர்களுக்கு மட்டும் எப்படி தெரியாமல் இருந்திருக்க முடியும்.

ஒரு கிரிக்கெட் அணியில் பந்து எவ்வாறு கையாளப்படுகிறது என்பது பந்துவீச்சாளர்களுக்கு முக்கியமான விஷயம். அப்படியிருக்கும்போது, பந்தை சேதப்படுத்துவது தொடர்பான நடவடிக்கை குறித்து அணியின் பந்துவீச்சாளர்களுக்குத் தெரியவில்லை என்பது நம்புவதற்கு கடினமாக இருப்பதாக அவர் தெரிவித்துள்ளார்.

இந்த விவகாரத்தில் ஆஸ்திரேலிய அணி நடந்துகொண்ட விதத்தையும் நாசர் ஹுசைன் கடுமையாக விமர்சித்துள்ளார். பந்தை சேதப்படுத்திய சம்பவத்திற்குப் பிறகு ஸ்டீவ் ஸ்மித், டேவிட் வார்னர் மற்றும் கேமரூன் பான்கிராஃப்ட் ஆகிய மூவரும் மட்டுமே தண்டனைகளையும் பொதுமக்களின் விமர்சனங்களையும் எதிர்கொண்டதாக அவர் கூறியுள்ளார்.

SCROLL FOR NEXT