கிரிக்கெட்

டி20 உலகக் கோப்பையை இந்திய அணி கண்டிப்பாக வெல்லும்- நடராஜன் நம்பிக்கை

சென்னை உள்ளிட்ட 5 நகரங்களிலும், இலங்கையின் கொழும்பு, பல்லேகல்லேயிலும் நடைபெற உள்ளன.

சென்னை,

டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் இன்று தொடங்கியுள்ளது. போட்டிகள் இந்தியாவில் அகமதாபாத், மும்பை, சென்னை உள்ளிட்ட 5 நகரங்களிலும், இலங்கையின் கொழும்பு, பல்லேகல்லேயிலும் நடைபெற உள்ளன.

இந்த நிலையில் , டி20 உலகக்கோப்பையை இந்திய அணி கண்டிப்பாக வெல்லும் என இந்திய வீரர் நடராஜன் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் கூறியதாவது,

தற்போதைய இந்திய கிரிக்கெட் அணி டெஸ்ட், ஒருநாள், டி20 ஆகிய 3 பிரிவுகளிலும் சிறப்பாக விளையாடி வருகிறது. தென்னாப்பிரிக்காவிற்கு எதிரான பயிற்சி போட்டியில் இந்தியா 260 ரன்கள் அடித்தது சிறப்பான தொடக்கம்.

இன்று முதல் டி20 உலககோப்பை தொடங்குகிறது. இதில் கண்டிப்பாக வெற்றி பெற்று உலககோப்பையை இந்தியா மீண்டும் வெல்லும்.இவ்வாறு அவர் கூறினார்.

SCROLL FOR NEXT