கிரிக்கெட்

இந்திய அணி வீரர்களுக்கு வலைப்பயிற்சி பந்துவீச்சாளர்கள் அறிவிப்பு

ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் அணி இந்தியா வந்து ஒரே ஒரு டெஸ்ட் மற்றும் 3 ஒருநாள் போட்டியில் விளையாடுகிறது.

மும்பை,

ஐ.பி.எல். போட்டி முடிந்ததும், ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் அணி இந்தியா வந்து ஒரே ஒரு டெஸ்ட் மற்றும் 3 ஒருநாள் போட்டியில் விளையாடுகிறது. இந்தியா-ஆப்கானிஸ்தான் அணிகள் இடையிலான டெஸ்ட் போட்டி நியூசண்டிகாரில் அடுத்த மாதம் (ஜூன்) 6-ந் தேதி முதல் 10-ந் தேதி வரை நடக்கிறது. ஒருநாள் போட்டிகள் முறையே தர்மசாலாவில் ஜூன் 14-ந் தேதியும், லக்னோவில் 17-ந் தேதியும், சென்னையில் 20-ந் தேதியும் நடக்கிறது.

இந்த நிலையில், இந்த தொடரில் இந்திய அணி வீரர்கள் வலைப்பயிற்சி மேற்கொள்ள ஐபிஎல் தொடரில் சிறப்பாக பந்துவீசிய பந்துவீச்சாளர்களை பிசிசிஐ அறிவித்துள்ளது. அதன்படி குர்ஜப்னீத் சிங், அகிப் நபி, பிரின்ஸ் யாதவ், சரண்ஷ் ஜெயின், ஜீஷன் அன்சாரி, ஷிவாங் குமார் ஆகியோர் அறிவிக்கப்பட்டுள்ளனர்.