கிரிக்கெட்

2 இன்னிங்ஸ்களிலும் 500 ரன்கள் எடுத்த முதல் அணி... டெஸ்ட் கிரிக்கெட்டில் வரலாறு படைத்த ஜிம்பாப்வே

ஆப்கானிஸ்தான் - ஜிம்பாப்வே அணிகள் இடையிலான முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டி ஷார்ஜாவில் நடைபெற்றது.

ஷார்ஜா,

டெஸ்ட் கிரிக்கெட்டில் இரு இன்னிங்ஸ்களிலும் 500 ரன்களைக் கடந்து ஜிம்பாப்வே அணி புதிய வரலாறு படைத்துள்ளது.

பேட்டிங்

ஆப்கானிஸ்தான் - ஜிம்பாப்வே அணிகள் இடையிலான முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டி ஷார்ஜாவில் நடைபெற்றது. டாஸ் வென்ற ஜிம்பாப்வே அணி முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தது.

முதல் இன்னிங்ஸில் 504 ரன்கள்

முதலில் பேட்டிங் செய்த ஜிம்பாப்வே அணி முதல் இன்னிங்ஸில் 504 ரன்கள் குவித்தது. அந்த அணியின் பிரெண்டன் டெய்லர் 131 ரன்களும், பிரையன் பென்னட் 128 ரன்களும் விளாசினர்.

இதையடுத்து முதல் இன்னிங்ஸை விளையாடிய ஆப்கானிஸ்தான் அணி சிறப்பாக பேட்டிங் செய்தது. ரஹ்மத் ஷா 173 ரன்கள் குவித்தார். ரஹ்மானுல்லா ஜத்ரான் 113 ரன்களும், செடிகுல்லா அடல் 105 ரன்களும் எடுத்தனர். இதனால் ஆப்கானிஸ்தான் அணி 514 ரன்கள் குவித்து 10 ரன்கள் முன்னிலை பெற்றது.

2-வது இன்னிங்ஸிலும் 500 ரன்

தொடர்ந்து 2-வது இன்னிங்ஸை விளையாடிய ஜிம்பாப்வே அணி மீண்டும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியது. பிரெண்டன் டெய்லர் 82 ரன்களும், பிரையன் பென்னட் 58 ரன்களும் எடுத்தனர்.

ஐந்தாவது மற்றும் கடைசி நாள் ஆட்டத்தில் கிரேக் எர்வின், வெஸ்லி மாதேவெரே ஆகியோர் அபாரமாக விளையாடினர். இருவரும் ஆப்கானிஸ்தான் பந்துவீச்சாளர்களின் முயற்சிகளை முறியடித்து ரன்களைக் குவித்தனர்.

கிரேக் எர்வின் 206 ரன்களும், வெஸ்லி மாதேவெரே 100 ரன்களும் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தனர். இதனால் ஜிம்பாப்வே அணி 2-வது இன்னிங்ஸில் 5 விக்கெட் இழப்புக்கு 523 ரன்கள் எடுத்திருந்தநிலையில், ஆட்டம் டிராவில் முடிந்தது.

வரலாற்றுச் சாதனை

இந்தப் போட்டியில் ஜிம்பாப்வே அணி தனது இரண்டு இன்னிங்ஸ்களிலும் 500 ரன்களுக்கு மேல் குவித்ததையடுத்து, டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் ஒரு போட்டியின் இரண்டு இன்னிங்ஸ்களிலும் 500 ரன்களுக்கு மேல் எடுத்த முதல் அணி என்ற சாதனையை படைத்துள்ளது.

SCROLL FOR NEXT