ஆக்லாந்து,
நியூசிலாந்துக்கு எதிரான நான்காவது டி20 போட்டியில் இந்திய அணியின் கேப்டன் ஸ்ரேயாஸ் ஐயர் டி20 சர்வதேசப் போட்டிகளில் ஒரு காலண்டர் ஆண்டில் இந்திய கேப்டனாக அதிக ரன்கள் எடுத்த வீரர் என்ற பெருமையை பெற்றுள்ளார்.
இந்தியா, நியூசிலாந்து இடையிலான 4-வது டி20 போட்டி நேற்று நடந்தது. இந்தப் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த நியூசிலாந்து அணிக்கு கிளென் பிலிப்ஸ், மைக்கேல் பிரேஸ்வெல் ஆகியோரின் அதிரடியால் 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட் இழப்புக்கு 259 ரன்கள் குவித்தது.
தொடர்ந்து 260 ரன்கள் என்ற கடினமான இலக்கை நோக்கி விளையாடிய இந்திய அணி 20 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட் இழப்புக்கு 172 ரன்கள் மட்டுமே எடுத்தது. அதிகபட்சமாக திலக் வர்மா 35 ரன்கள் எடுத்தார். இதன் மூலம் நியூசிலாந்து அணி 87 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
இந்தப் போட்டியில் ஸ்ரேயாஸ் ஐயர் 11 பந்துகளில் 22 ரன்கள் எடுத்தார். இதன் மூலம், 2026-ம் ஆண்டில் இந்திய கேப்டனாக டி20 சர்வதேசப் போட்டிகளில் அவர் எடுத்த ரன்களின் எண்ணிக்கை 666 ஆக உயர்ந்தது. இதன் மூலம் ரோகித் சர்மாவின் சாதனையை முறியடித்தார்.
கடந்த 2022-ம் ஆண்டில் இந்திய அணியின் கேப்டனாக ரோகித் சர்மா 29 போட்டிகளில் 656 ரன்கள் எடுத்ததே சாதனையாக இருந்தது. தற்போது அந்த சாதனையை ஸ்ரேயாஸ் ஐயர் முறியடித்துள்ளார்.