ஐதராபாத்,
ஐ.பி.எல். கிரிக்கெட்டில் நேற்று முன்தினம் இரவு நடந்த ராஜஸ்தான் அணிக்கு எதி ரான ஆட்டத்தில் ஐதராபாத் அணி அபார வெற்றி பெற்றது. ஐதராபாத் அணி 5 போட்டிகளில் 2 வெற்றி பெற்றுள்ளது.
இந்த நிலையில், ஐதராபாத் அணியில் பயிற்சியின் போது கையில் காயமடைந்த ஆல்-ரவுண்டர் பிரைடன் கார்சுக்கு (இங்கிலாந்து) பதிலாக இடக்கை வேகப்பந்து வீச்சாளர் மதுஷன்கா (இலங்கை) ரூ.75 லட்சத் துக்கு ஒப்பந்தமாகியுள்ளார்.