கிரிக்கெட்

வங்காள‌தேச டெஸ்ட் வரலாற்றில் புதிய சாதனை... இரட்டை சதம் விளாசி தவ்ஹித் ஹிருதோய் அசத்தல்

டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் அணி முதலில் பேட்டிங் தேர்வு செய்தது.

சிலெட்,

வெஸ்ட் இண்டீஸ் அணிகள் இடையிலான 2-வது டெஸ்ட் போட்டியில் இரட்டை சதம் விளாசி தவ்ஹித் ஹிருதோய் அசத்தியுள்ளார்.

ஹசன் மஹ்முது

வங்காள‌தேசம் - வெஸ்ட் இண்டீஸ் அணிகள் இடையிலான 2-வது டெஸ்ட் போட்டி சிலெட்டில் நடைபெற்று வருகிறது. இதில் டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் அணி முதலில் பேட்டிங் தேர்வு செய்தது.

அதன்படி முதலில் களமிறங்கிய வெஸ்ட் இண்டீஸ் அணி, முதல் இன்னிங்சில் 356 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. அந்த அணியில் சிறப்பாக விளையாடிய அமீர் ஜாங்கூ 133 ரன்கள் எடுத்து சதமடித்தார். கெவின் விக்காம் 61 ரன்களும், ஜஸ்டின் கிரீவ்ஸ் 56 ரன்களும் எடுத்தனர். 4-வது விக்கெட்டுக்கு அமீர் ஜாங்கூ - கெவின் விக்காம் ஜோடி 131 ரன்கள் சேர்த்தது.

வங்காள‌தேச அணி தரப்பில் ஹசன் மஹ்முது 6 விக்கெட்டுகளை வீழ்த்தினார். தஸ்கின் அகமது, மெஹிதி ஹசன் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளை கைப்பற்றினர்.

இரட்டை சதம்

இதையடுத்து முதல் இன்னிங்சை தொடங்கிய வங்காள‌தேச அணி, தொடக்கத்தில் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. ஒரு கட்டத்தில் 184 ரன்களுக்கு 7 விக்கெட்டுகளை இழந்து அந்த அணி கடும் நெருக்கடியில் இருந்தது.

ஆனால், மறுமுனையில் நிலைத்து நின்று விளையாடிய தவ்ஹித் ஹிருதோய், வெஸ்ட் இண்டீஸ் பந்துவீச்சைச் சிறப்பாக எதிர்கொண்டு ரன்களை குவித்தார்.

தொடர்ந்து அதிரடியாக விளையாடிய ஹிருதோய் இரட்டை சதம் கடந்து சாதனை படைத்தார். இறுதியில் வங்காள‌தேச அணி முதல் இன்னிங்சில் 386 ரன்கள் எடுத்தது. ஹிருதோய் 242 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் இருந்தார். இது வங்காள‌தேச டெஸ்ட் வரலாற்றில் ஒரு வீரர் எடுத்த அதிகபட்ச தனிநபர் ஸ்கோராகும். இதற்கு முன்பு முஷ்பிகுர் ரஹீம் 219 ரன்கள் எடுத்ததே சாதனையாக இருந்தது.

வெஸ்ட் இண்டீஸ் தரப்பில் ஜோமல் வாரிகன் 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

2-வது இன்னிங்ஸ்

முதல் இன்னிங்சில் 30 ரன்கள் முன்னிலை பெற்ற வங்காள‌தேச அணியைத் தொடர்ந்து, வெஸ்ட் இண்டீஸ் அணி 2-வது இன்னிங்சை தொடங்கியது. 3-வது நாள் ஆட்ட நேர முடிவில் அந்த அணி விக்கெட் இழப்பின்றி 7 ரன்கள் எடுத்துள்ள‌து.

SCROLL FOR NEXT