கிரிக்கெட்

ஒருநாள் கிரிக்கெட்டில் புதிய உலக சாதனை... சச்சினை முந்திய விராட் கோலி

இப்போட்டியில் விராட் கோலி 74 ரன்கள் எடுத்தார்.

ஆக்லாந்து,

ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளில் இலக்கைத் துரத்தும்போது அதிக ரன்கள் குவித்த வீரர் என்ற சச்சின் டெண்டுல்கரின் நீண்டகால சாதனையை விராட் கோலி முறியடித்துள்ளார்.

பந்துவீச்சு

இந்திய அணி நியூசிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடி வருகிறது. இதில் இரு அணிகளுக்கும் இடையிலான முதல் ஒருநாள் போட்டி ஆக்லாந்தில் இன்று நடைபெற்றது. இதில் டாஸ் வென்ற இந்திய அணி பந்துவீச்சை தேர்வு செய்தது.

வெற்றி

இதையடுத்து முதலில் பேட்டிங் செய்த நியூசிலாந்து அணி 40.2 ஓவர்களில் 185 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது.

தொடர்ந்து இலக்கை நோக்கி ஆடிய இந்திய அணி டிஎல்எஸ் முறைப்படி 22.4 ஓவர்களில் 5 விக்கெட்டுகளை இழந்து 143 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது.

சாதனை

இப்போட்டியில் விராட் கோலி 74 ரன்கள் எடுத்தார். இதன் மூலம் ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளில் இலக்கைத் துரத்தும்போது அதிக ரன்கள் குவித்த வீரர் என்ற சச்சின் டெண்டுல்கரின் நீண்டகால சாதனையை விராட் கோலி முறியடித்துள்ளார்.

சச்சின் டெண்டுல்கர் 8,720 ரன்களுடன் முதலிடத்தில் இருந்தநிலையில், தற்போது 8,722 ரன்களுடன் கோலி அவரை முந்தி முதலிடத்தைப் பிடித்துள்ளார்.

SCROLL FOR NEXT