வெல்லிங்டன்,
இந்திய ஏ - நியூசிலாந்து ஏ அணிகள் மூன்று நான்கு நாள் கிரிக்கெட் போட்டிகளில் விளையாட உள்ளது. இந்தத் தொடர், நவம்பர் 10-ம் தேதி வரை நடைபெறுகிறது. முதல் மற்றும் மூன்றாவது போட்டிகள் லிங்கனிலும், இரண்டாவது போட்டி கிறிஸ்ட்சர்ச்சிலும் நடைபெற உள்ளன.இரு அணிகளுக்கும் இடையேயான முதல் போட்டி இன்று தொடங்குகிறது.
இந்த போட்டிக்கான டாஸ் போடப்பட்டது. அதில் டாஸ் வென்ற நியூசிலாந்து ஏ அணியின் கேப்டன் ரைஸ் மரியு பந்துவீச்சை தேர்வு செய்தார். அதன்படி இந்திய ஏ அணி முதலில் பேட்டிங் செய்து வருகிறது.