கிரிக்கெட்

அர்ஷ்தீப் சிங் வேகத்தில் சிக்கிய நியூசிலாந்து.... இந்தியாவுக்கு 186 ரன்கள் இலக்கு

குர்னூர் பிரார்3 விக்கெட் வீழ்த்தினார்.

இந்திய கிரிக்கெட் அணி நியூசிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடி வருகிறது. 20 ஓவர் தொடரை 3-2 என்ற கணக்கில் கைப்பற்றிய இந்திய அணி அடுத்ததாக 5 போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரில் பங் கேற்கிறது.

இதன்படி இந்தியா- நியூசிலாந்து இடையிலான முதலாவது ஒரு நாள் போட்டி ஆக்லாந்தில் உள்ள ஈடன்பார்க் ஸ்டேடியத்தில் இன்று (புதன்கிழமை) நடக்கிறது.

அர்ஷ்தீப் சிங்

இந்த போட்டிக்கான டாஸ் போடப்பட்டது. அதில் டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் கில் பந்துவீச்சை தேர்வு செய்தார் . அதன்படி நியூசிலாந்து அணி முதலில் பேட்டிங் செய்தது.

நியூசிலாந்து அணிக்கு இந்திய வேகப்பந்து வீச்சாளர்கள் கடும் நெருக்கடி கொடுத்தனர். தொடக்கத்தில் இருந்தே துல்லியமான வேகப்பந்து வீச்சை வெளிப்படுத்திய இந்திய பந்துவீச்சாளர்கள், நியூசிலாந்து பேட்ஸ்மேன்களை பெரிய ரன்கள் குவிக்க விடாமல் கட்டுப்படுத்தினர்.குறிப்பாக அர்ஷ்தீப் சிங் தனது வேகப்பந்து வீச்சால் விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தினார். குர்னூர் பிரார், அன்ஷுல் காம்போஜ் ஆகியோரும் சிறப்பாகப் பந்துவீசினர்.

பேட்டிங் வரிசை

நியூசிலாந்து அணியின் பேட்டிங் வரிசை இந்திய பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்தது. தொடக்க வீரர் வில் யங் 9 ரன்களில் ஆட்டமிழந்தார். தொடர்ந்து களமிறங்கிய ஹென்றி நிக்கோல்ஸ் 9 ரன்கள் மட்டுமே எடுத்து வெளியேறினார். டாம் லாதமும் 3 ரன்களில் ஆட்டமிழந்து ஏமாற்றமளித்தார்.

நியூசிலாந்து அணியின் தொடக்க வீரர் டிம் சீபர்ட் 38 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். 43 பந்துகளை எதிர்கொண்ட அவர், 3 பவுண்டரிகள் மற்றும் 2 சிக்ஸர்கள் விளாசினார்.பிளாக் திக்னர் 34 ரன்கள் எடுத்தார்.

இதனால் நியூசிலாந்து அணி 40.2 ஓவர்களில் 185 ரன்களில் ஆட்டமிழந்தது. இந்திய அணியில் அர்ஷ்தீப் சிங் 4 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தினார். குர்னூர் பிரார்3 விக்கெட் வீழ்த்தினார்.

SCROLL FOR NEXT