கிரிக்கெட்

விராட் கோலியின் பேட்டிங் திறமையை புகழ்ந்த நியூசிலாந்து வீரர்

அவரது ஆட்டத்தில் 13 பவுண்டரிகள் மற்றும் ஒரு சிக்ஸர் அடங்கும்.

நியூசிலாந்து அணியின் வேகப்பந்துவீச்சாளர் ஜேக்கப் டபி, இந்திய நட்சத்திர வீரர் விராட் கோலியின் பேட்டிங் திறமையை வெகுவாகப் பாராட்டியுள்ளார். இந்தியா – நியூசிலாந்து அணிகள் இடையிலான முதல் ஒருநாள் போட்டியில் விராட் கோலி அதிரடியாக விளையாடி 51 பந்துகளில் 74 ரன்கள் குவித்து இந்திய அணியின் வெற்றிக்கு முக்கியப் பங்காற்றினார். அவரது ஆட்டத்தில் 13 பவுண்டரிகள் மற்றும் ஒரு சிக்ஸர் அடங்கும்.

ஜேக்கப் டபி

போட்டிக்குப் பிறகு கோலியின் பேட்டிங் குறித்து பேசிய ஜேக்கப் டபி, "பந்தின் பவுன்ஸை எதிர்கொள்வதில் கோலி எந்தச் சிரமத்தையும் சந்திக்கவில்லை. ஹூக் ஷாட், புல் ஷாட் போன்ற ஷாட்களை மிகச் சிறப்பாக விளையாடினார். அதன்பிறகு பந்தை நேராக மைதானத்தின் வழியாகவும் பலமாக அடிக்கக்கூடியவர். இதில் ஆச்சரியப்படுவதற்கு ஒன்றுமில்லை. அவர் பல ஆண்டுகளாக இதுபோன்ற சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறார். பெங்களூருவில் நடைபெற்ற வலைப்பயிற்சியின்போதுகூட எனக்கு எதிராகப் பலமுறை இதேபோன்று அதிரடியாக விளையாடியுள்ளார்.

மேலும், கோலியின் ஆட்டத்தில் குறைகளைக் கண்டுபிடிப்பது மிகவும் கடினம். பந்துவீச்சாளர்களின் வேகத்தையே தனக்குச் சாதகமாகப் பயன்படுத்தி ரன்களைக் குவிக்கும் திறமை கோலியிடம் இருக்கிறது, பந்தை உயரமாகவும் நேராகவும் அடிக்கும் திறன் அவரை இன்னும் ஆபத்தான பேட்ஸ்மேனாக மாற்றுகிறது.வென தெரிவித்தார்.

முதல் ஒருநாள் போட்டியில் நியூசிலாந்து அணி 185 ரன்களுக்கு ஆட்டமிழந்த நிலையில், இந்திய அணி டக்வொர்த் லூயிஸ் முறையில் 143 ரன்கள் இலக்கை 22.4 ஓவர்களில் எட்டி 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

SCROLL FOR NEXT